தில்லியில் ஆளுநர்கள் மாநாடு இன்று தொடக்கம்

புதிய இந்தியாவை உருவாக்குவது தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து ஆளுநர்களும் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு, தில்லியில் இன்று தொடங்குகிறது.

புதிய இந்தியாவை உருவாக்குவது தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து ஆளுநர்களும் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு, தில்லியில் இன்று தொடங்குகிறது.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 வருகிற 2022-ஆம் ஆண்டுடன் நமது நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. இதனை முன்னிட்டு, அந்த ஆண்டில், வளர்ச்சி மற்றும் வளங்களில் மேலோங்கிய புதிய இந்தியாவை உருவாக்குவது என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், "2022-ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியா' என்ற தலைப்பிலான மாநாடு, குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை தொடங்குகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நாட்டில் உள்ள 27 மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். மாநாட்டுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை வகிக்கிறார்.

முதல் நாள் மாநாட்டில், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து மத்தியக் கொள்கைக் குழு விவரிக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து, "புதிய இந்தியா' என்ற இலக்கை அடைவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொதுச் சேவைகள் குறித்து ஆளுநர்கள் கலந்துரையாடவுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டங்களில் மத்திய அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.

இதையடுத்து, நாட்டின் உயர்கல்வியின் தரம், திறன் மேம்பாடு, தொழில்முனைவு ஆகிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.

இரண்டாவது நாள் மாநாட்டில், தாங்கள் பொறுப்பில் இருக்கும் மாநிலங்களில் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆளுநர்கள் விரிவான விவாதங்களில் ஈடுபடுவார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com