பெட்ரோல் நிலைய முகவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

பெட்ரோல் நிலைய முகவர்கள் வெள்ளிக்கிழமை நடத்துவதாக அறிவித்திருந்த ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பெட்ரோல் நிலைய முகவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

பெட்ரோல் நிலைய முகவர்கள் வெள்ளிக்கிழமை நடத்துவதாக அறிவித்திருந்த ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
விற்பனை மிகவும் குறைந்தால் அபராதம், உரிய அனுமதி இல்லாமல் தானியங்கி பெட்ரோல் நிரப்பும் இடத்தில் பணியாளர்களை நியமிப்பது, பெட்ரோல் நிலைய பணியாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் அளிப்பது, பெட்ரோல் நிலையத்தில் கழிவறையை தூய்மையாகப் பராமரிக்காதது போன்றவை கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெட்ரோல் நிலையங்களுக்கான விதிகள் அண்மையில் கடுமையாக்கப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 13-ஆம் தேதி ஒருநாள் மட்டும் பெட்ரோல் நிலையங்களை மூடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு பெட்ரோல் நிலைய முகவர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். ஆனால், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று 3 பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் முகவர்கள் சங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தன. இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்துப் பேசிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் சிங், 'பெட்ரோல் நிலைய முகவர்களுக்கு வழங்கும் கமிஷனை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சில வாரங்களுக்கு முன்புதான் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 
இந்நிலையில், அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது. பெட்ரோலிய நிறுவனத்திடம் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறும் முகவர்கள், அதனை தங்களிடம் பணியாற்றுபவர்களுக்கு அளிக்க மறுப்பதை ஏற்க முடியாது.
பெட்ரோல் நிலைய முகவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் மாநில அரசு அவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, பெட்ரோல் நிலையங்களை கையகப்படுத்த முடியும். இதேபோன்ற நடவடிக்கையை பெட்ரோலிய நிறுவனங்களும் மேற்கொள்ளலாம்' என்று எச்சரிக்கை விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com