நடிகை ஹேமா மாலினி வாழ்க்கை வரலாற்று நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள பிரதமர் மோடி!

விரைவில் வெளியாகவுள்ள நடிகை ஹேமா மாலினியின் சுயசரிதைக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ள விஷயம் தெரிய வந்துள்ளது.
நடிகை ஹேமா மாலினி வாழ்க்கை வரலாற்று நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள பிரதமர் மோடி!

புதுதில்லி: விரைவில் வெளியாகவுள்ள நடிகை ஹேமா மாலினியின் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ள விஷயம் தெரிய வந்துள்ளது.

ஹிந்தித் திரையுலகில் 1968-ஆம் ஆண்டு ராஜ் கபூருக்கு ஜோடியாக 'சப்னோ கா சவுடகர்'  என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹேமா மாலினி. முழுமையான பரத நாட்டியக் கலைஞரான ஹேமா மாலினி தனது அபார அழகாலும், நடிப்புத் திறனாலும் ஹிந்தி சினிமாவின் மறக்கமுடியாத பல படங்களில் நடித்துள்ளார். இதன் காரணமாக பெரும்பாலும் ஆண்களின் உலகமாக இருந்த திரையுலகில் 'பெண் சூப்பர் ஸ்டாராக' விளங்கியவர். அவருக்கு 'ட்ரீம் கேர்ள்' என்ற பட்டப் பெயரே கொடுக்கப்பட்டது.

திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட பின்னர் 1999-ஆம் ஆண்டு வாக்கில் பஞ்சாபின் குருதாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து தன் அரசியல் பயணத்தினைத் துவக்கினார். தற்பொழுது அவர் உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இந்நிலையில் அவரது அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றினை, அவரது அனுமதியுடன் 'ஸ்டார் டஸ்ட்' இதழின் முன்னாள் ஆசிரியரும் தயாரிப்பாளருமான ராம் கமல் முகர்ஜி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதத் துவங்கினார்.

'பியாண்ட் தி ட்ரீம் கேர்ள்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகமானது ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ளது .தற்பொழுது முழுமையாக நிறைவடைந்து புத்தகம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. வரும் அக்டோபர் 16-ஆம் தேதி அன்று ஹேமா மாலினியின் 69-ஆவது பிறந்த  நாள். அத்துடன் இந்தியத் திரை உலகில் அவரது 50-ஆவது ஆணடு நிறைவும் இணைந்து வருகிறது  எனவே அன்றே புத்தகத்தினை வெளியிட பதிப்பகத்தினர் முடிவு செய்துள்ளனர்.  

இந்நிலையில் நடிகை ஹேமா மாலினியின் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு பிரதமர் மோடி முன்னுரை எழுதியுள்ள விஷயம் தெரிய வந்துள்ளது. இது குறித்து நூல் ஆசிரியரான ராம் கமல் முகர்ஜி கூறியதாவது:

ஹேமா மாலினி குறித்த தனது எண்ணங்களை நமது பிரதமர் இந்த புத்தக முன்னுரையில் எழுதியுள்ளார். இது சுருக்கமான, இனிமையான மற்றும் தெளிவான ஒன்றாக வந்துள்ளது. ஒரு ஆசிரியராக எனக்கும், நடிகையாக ஹேமா மாலினிக்கும் இது மிகப் பெரிய கெளரவமாகும். ஏனென்றால் பதவியில் இருக்கும் ஒரு பிரதமர், ஹிந்தி திரைப்பட உலகை சேர்ந்த கலைஞர் ஒருவரைப் பற்றிய புத்தகத்துக்கு முன்னுரை எழுதுவது இதுவே முதன் முறையாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com