ஆம்பி வேலி ஏலத்துக்கு இடையூறு செய்தால் சிறை: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

சஹாரா குழுமத்துக்குச் சொந்தமான புணே அருகேயுள்ள ஆம்பி வேலி சொத்துகளை ஏலம் விடுவதற்கு யாரேனும் இடையூறு செய்தால் அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம்
ஆம்பி வேலி ஏலத்துக்கு இடையூறு செய்தால் சிறை: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

சஹாரா குழுமத்துக்குச் சொந்தமான புணே அருகேயுள்ள ஆம்பி வேலி சொத்துகளை ஏலம் விடுவதற்கு யாரேனும் இடையூறு செய்தால் அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதலீட்டாளர்களின் ரூ.24,000 கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில் சஹாரா குழுமம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) செலுத்த வேண்டிய தொகையில் ரூ.9,000 கோடி அளவுக்கு பாக்கி வைத்துள்ளது. இந்த வழக்கில் 2 ஆண்டுகள் வரை சிறையில் இருந்த சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் இப்போது பரோலில் வெளியே உள்ளார்.
இந்நிலையில், ஆம்பி வேலி சொத்துகளை ஏலம் விடுவதற்கு சஹாரா நிறுவனம் இடையூறு ஏற்படுத்துவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்விடம் செபி வியாழக்கிழமை தெரிவித்தது. இதையடுத்து, கோபமடைந்த நீதிபதிகள், "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆம்பி வேலி சொத்துகள் ஏலம் நடந்து முடியும் வரை சஹாரா குழுமம் எவ்வித தலையீடு செய்யக் கூடாது. அப்படி யாராவது தலையிட்டால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது, சிறைக்கு அனுப்பப்படுவார்கள்' என்று எச்சரிக்கை விடுத்தனர்.
முன்னதாக, ஆம்பி வேலி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இருப்பதாக புணே போலீஸாருக்கு சஹாரா குழுமம் கடிதம் எழுதியது. இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். எனவே, அந்த சொத்துகளின் ஏலத்தில் பங்கேற்க யாரும் முன்வரவில்லை என்று உச்ச நீதிமன்றத்திடம் செபி கூறியது.
இது தொடர்பாக, மகாராஷ்டிர மாநில காவல் துறை தலைவருக்கும் தனியாக உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "ஆம்பி வேலி சொத்துகளை 48 மணி நேரத்தில் நீதிமன்ற அலுவலர்களிடம் காவல் துறை ஒப்படைக்க வேண்டும். செபி அந்த சொத்துகளை ஏலம் விடும் நடவடிக்கைகளைத் தொடரலாம் என்றும் அறிவுறுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com