பெட்ரோல், டீசலுக்கும் ஜிஎஸ்டி: சுஷில் குமார் மோடி வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருள்களை சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமென்று பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோல், டீசலுக்கும் ஜிஎஸ்டி: சுஷில் குமார் மோடி வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருள்களை சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமென்று பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிகார் நிதித் துறை பொறுப்பையும் வகித்து வரும் சுஷில் குமார் மோடி, ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராகவும், ஜிஎஸ்டிஎன் தொழில்நுட்ப விவகாரங்களுக்கு தீர்வுகாணும் அமைச்சர்கள் குழுவின் தலைவராகவும் உள்ளார். கொச்சியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டுமென்றுதான் பல மாநில அரசுகள் விரும்புகின்றன. எனவே, விரைவில் இது விஷயத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். இது எனது தனிப்பட்ட கருத்துதான். சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருள்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பில்தான் வருகின்றன.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுள்ள இந்த காலகட்டத்தில் பொருளாதாரத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், எதிர்காலத்தில் இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து இரு காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்ததால், ஒட்டு மொத்த பொருளாதாரமே ஸ்தம்பித்துவிட்டதாக அர்த்தமில்லை. இது ஒரு சுழற்சிதான். எனவே, மீண்டும் ஏற்றம் ஏற்படும்.
கடந்த காங்கிரஸ் அரசில் கூட பல காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. ஜிஎஸ்டி-யை முந்தைய காங்கிரஸ் அரசே நிறைவேற்றியிருக்க வேண்டும். 
ஆனால், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம், ஜிஎஸ்டி தொடர்பாக மாநிலங்களில் ஏற்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க உரிய முயற்சி மேற்கொள்ளவில்லை. அப்போது பிகார், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் ஜிஎஸ்டியை எதிர்க்கவில்லை. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது ஜிஎஸ்டியை எதிர்க்கவில்லை. பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் ஜிஎஸ்டி இடம் பெற்றிருந்தது.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது மிகப்பெரிய வரிச் சீர்திருத்த நடவடிக்கையாகும். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகியவற்றால் எதிர்காலத்தில் நமது நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com