குஜராத் தேர்தல் தேதி ஏன் அறிவிக்கப்படவில்லை?: தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க ஜேடியூ கோரிக்கை

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகள் ஏன் அறிவிக்கப்படவில்லை? என்பதற்கு தேர்தல் ஆணையம் நம்பகமான பதிலை அளிக்க வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான
குஜராத் தேர்தல் தேதி ஏன் அறிவிக்கப்படவில்லை?: தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க ஜேடியூ கோரிக்கை

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகள் ஏன் அறிவிக்கப்படவில்லை? என்பதற்கு தேர்தல் ஆணையம் நம்பகமான பதிலை அளிக்க வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கோரியுள்ளது.
ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. எனினும், குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆணையம் கூறியது. இது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தன. குஜராத்தில் பிரதமர் மோடியும், பாஜகவும் மக்களை ஈர்க்கும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு வசதியாகவே தேர்தல் ஆணையம் அம்மாநிலத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் ஒத்திவைத்துள்ளதாக அக்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் தேர்தல் ஆணையத்துக்கு தற்போது கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா, டுவிட்டர் வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் 'தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி இருப்பதோடு, அவ்வாறு இருப்பது தெரியும்படியும் நடந்து கொள்ள வேண்டும். குஜராத் தேர்தல் தேதிகள் ஏன் அறிவிக்கப்படவில்லை? இதற்கு நமக்கு நம்பகமான பதில்கள் தேவை' என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்ட மற்றொரு பதிவில், 'பட்டினி மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. தற்போது வேகமாக வளரும் இந்தப் பொருளாதாரம் யாருக்காக இயங்குகிறது? என்ற கேள்வி எழுகிறது' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக பவன் வர்மாவிவைத் தொடர்பு கொண்டு பிடிஐ செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அவை தனிப்பட்ட கருத்துகளா? ஐக்கிய ஜனதா தளத்தின் கருத்தா? என்றும் கேட்டார். அதற்கு பவன் வர்மா பதிலளித்துக் கூறியதாவது:
ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் என்ற முறையிலேயே நான் அக்கேள்வியை எழுப்பியிருந்தேன். எனது கருத்தை அரசியல் ரீதியிலான கருத்தாகப் பார்க்கக் கூடாது. ஏனெனில் தேர்தல் ஆணையம் என்பது எந்தக் கட்சியின் சொத்தும் அல்ல.
ஹிமாசலப் பிரதேச தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால், குஜராத் தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எனவேதான் பாரபட்சமற்ற தன்மையைத் தக்க வைக்குமாறு நான் தேர்தல் ஆணைத்திடம் கேட்டேன். குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காததற்கு அந்த அமைப்பு நம்பகமான பதில்களை அளிக்க வேண்டும். குறுகிய அரசியலுக்கு அப்பாற்பட்ட கேள்வி இது. ஜனநாயகம் என்பது அமைப்புகளின் வலிமை தொடர்பானது.
பட்டினி நிறைந்த நாடுகளில் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளûதைப் பொறுத்தவரை, பொருளாதாரம் என்பது நீதியுடன் கூடிய வளர்ச்சி என்பதாக இருக்க வேண்டும் என்று எங்கள் கட்சியின் கொள்கை மட்டுமன்றி பிகார் முதல்வர் நிதீஷ்குமாரின் தனிப்பட்ட கருத்தும் ஆகும். 
பொருளாதார வளர்ச்சியின் திசை என்ன? என்ற கேள்வி எழுகிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியானது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உறுப்பினராக இருக்கலாம். ஆனால் எங்கள் கட்சி தனி அடையாளமும், சித்தாந்தமும் கொண்ட கட்சியாகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com