பிரதமர் மோடியின் இலக்கை குறைத்த மின்துறை அமைச்சகம்!

செளபாக்யா திட்டத்தின்கீழ் 4 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்படும் என்று அத்திட்டத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் இலக்கை குறைத்த மின்துறை அமைச்சகம்!

செளபாக்யா திட்டத்தின்கீழ் 4 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்படும் என்று அத்திட்டத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், இப்போது 3 கோடி குடும்பங்களுக்கு இத்திட்டத்தின்கீழ் மின்சார வசதி அளிக்கப்பட இருப்பதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நமது நாட்டில் 4 கோடி குடும்பத்தினருக்கு இன்னும் மின்சார வசதி கிடைக்கவில்லை என்பது ஒரு உத்தேசமான மதிப்பீட்டின் அடிப்படையில் கூறப்பட்டதுதான். ஆனால், உண்மையான மதிப்பீட்டின்படி சுமார் 3 கோடி குடும்பங்களுக்கு இன்னும் மின்சார வசதி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மின்சார வசதியில்லாத அனைத்து வீடுகளுக்கும் 2018-ஆம் ஆண்டு டிசம்பருக்கும் மின் வசதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது 2019-ஆம் மார்ச் மாதத்துக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com