இந்தியர்களின் வியர்வையில் விளைந்ததே தாஜ்மஹால்! சர்ச்சைகளைத் தணிக்க யோகி புதிய கருத்து

இந்தியர்களின் வியர்வையில் உருவானதே தாஜ்மஹால் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
இந்தியர்களின் வியர்வையில் விளைந்ததே தாஜ்மஹால்! சர்ச்சைகளைத் தணிக்க யோகி புதிய கருத்து

இந்தியர்களின் வியர்வையில் உருவானதே தாஜ்மஹால் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
உத்தரப் பிரதேச சுற்றுலா கையேட்டிலிருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டதால் எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே, அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
உலகின் 7 அதிசயங்களுள் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹால், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது. முகலாயப் பேரரசர் ஷாஜகானால் நிறுவப்பட்ட இந்த தாஜ்மஹாலைக் காண்பதற்காக உத்தரப் பிரதேசத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தியாவின் சுற்றுலாத் துறைக்கு கிடைக்கப்பெறும் வருவாயில் பெரும் பகுதி, தாஜ்மஹால் மூலமாகவே வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில், உத்தரப் பிரதேச சுற்றுலாத் துறையின் கையேட்டிலிருந்து தாஜ்மஹால் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேச அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
முகலாய ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக, தாஜ்மஹாலை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு இருட்டடிப்புச் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அரசின் இந்த முடிவினை பாஜக தலைவர்கள் சிலரும் விமர்சித்து கருத்து வெளியிட்டனர்.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி? இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு புதிய கருத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோரக்பூரில் செய்தியாளர்கிளிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தாஜ்மஹாலை நிறுவியது யார் என்பது முக்கியம் கிடையாது. ஆனால், இந்தியர்களின் வியர்வையாலும், ரத்தத்தாலும் மட்டுமே அது கட்டப்பட்டது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தாஜ்மஹாலின் கட்டமைப்பு உலக அளவில் புகழ்பெற்ற ஒன்று. தாஜ்மஹால் நம்முடைய வரலாற்றுச் சின்னம். அதனைப் பாதுகாக்க வேண்டியது உத்தரப் பிரதேச அரசின் கடமையாகும்.
தாஜ்மஹால் உள்பட உத்தரப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் பல்வேறு சுற்றுலாத் தலங்களின் மேம்பாட்டுக்கு ரூ.370 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் யோகி ஆதித்யநாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com