சபரிமலை புதிய மேல்சாந்தியாக ஏ.வி.உன்னிகிருஷ்ணன் நியமனம்

கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக ஏ.வி.உன்னிகிருஷ்ணன் (57) நம்பூதிரி நியமிக்கப்பட்டுள்ளார். மாளிகைபுரத்து அம்மன் கோயிலின் புதிய

கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக ஏ.வி.உன்னிகிருஷ்ணன் (57) நம்பூதிரி நியமிக்கப்பட்டுள்ளார். மாளிகைபுரத்து அம்மன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக அனீஷ் நம்பூதிரி (38) தேர்வு செய்யப்பட்டார்.
உன்னிகிருஷ்ணன், திருச்சூர் மாவட்டம், கொடக்கரையைச் சேர்ந்தவர் ஆவார். இவர், கொச்சி தேவஸ்வம் வாரியத்தின் கீழ் தற்போது மங்களத்து அழகத்து துர்கா கோயில் மேல்சாந்தியாக இருந்து வருகிறார்.
கொல்லம் மாவட்டம், மயினகபள்ளியில் உள்ள பகவதி அம்மன் கோயில் மேல்சாந்தியாக அனீஷ் நம்பூதிரி இருந்து வருகிறார்.
சபரிமலை, மாளிகைபுரத்து அம்மன் கோயில்களின் மேல்சாந்திகளை பந்தள வம்சக் குழந்தைகள் தேர்வு செய்வது வழக்கமாகும். அதன்படி, ஐயப்பன் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை காலை பூஜைக்குப் பிறகு, புதிய மேல்சாந்திகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
உன்னிகிருஷ்ணனை பந்தள குழந்தை சூர்ய அனூப் வர்மாவும் (8), அனீஷ் நம்பூதிரியை ஹிருதய வர்மாவும் (7) குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர்.
அந்த நிகழ்வில், தேவஸ்வம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், தேவஸ்வம் ஆணையர் சி.பி.ராமராஜா பிரேம பிரசாத், சபரிமலை செயல் அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் இருந்தனர். புதிய மேல்சாந்திகள் கார்த்திகை 1-ஆம் தேதி (நவ.16) பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com