தெலுங்கு தேசத்தில் ஒய்எஸ்ஆர் காங். எம்.பி.

ஒய்எஸ்ஆர் காங்கிரûஸச் சேர்ந்த ஆந்திர எம்.பி. பட்டா ரேணுகா, தெலுங்கு தேசம் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரûஸச் சேர்ந்த ஆந்திர எம்.பி. பட்டா ரேணுகா, தெலுங்கு தேசம் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தார். மாநில முதல்வரும், கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு முன்னிலையில் நடைபெற்ற விழாவில், தனது ஆதரவாளர்களுடன் அவர் கட்சியில் சேர்ந்தார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரûஸச் சேர்ந்த எம்.பி.யான எஸ்பிஒய் ரெட்டி ஏற்கெனவே அங்கிருந்து விலகி தெலுங்கு தேசத்தில் ஐக்கியமான நிலையில், தற்போது மேலும் ஒரு மக்களவை எம்.பி., அக்கட்சியிலிருந்து வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த சூழலில், எஸ்பிஒய் ரெட்டி கட்சியை விட்டு விலகியதால் மக்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் பலம் 7-ஆக இருந்தது.
இதற்கு நடுவே, மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கர்னூல் எம்.பி. பட்டா ரேணுகா நெருக்கம் காட்டி வந்தார். 
அவரும் கட்சியை விட்டு வெளியேறலாம் என்ற சூழல் இருந்த நிலையில், ரேணுகாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், கட்சியிலிருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்தார். 
பின்னர், தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசத்தில் இணைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com