ப்ரீபெய்ட் கட்டணங்களை சத்தமின்றி உயர்த்திய ஜியோ: உங்களுக்கு எவ்வளவு கூடுதல் செலவு?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தினந்தோறும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் குரல்வழி சேவைக்கு, 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானுக்கான கட்டணம்... 
ப்ரீபெய்ட் கட்டணங்களை சத்தமின்றி உயர்த்திய ஜியோ: உங்களுக்கு எவ்வளவு கூடுதல் செலவு?

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தினந்தோறும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் குரல்வழி சேவைக்கு, 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானுக்கான கட்டணம் தற்பொழுது 15% சதவீதம் உயர்ந்துள்ளது.

துவக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா மற்றும் குரல்வழி சேவை இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. பின்னர் மூன்று மாதங்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டாவுக்கு  ரூ.309 கட்டணமாக நிர்ணயயிக்கப்பட்டது. சிறிது நாள் கழித்து அதே திட்டத்துக்கு 84 நாட்களுக்கு 399 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

தற்பொழுது அந்த திட்டத்துக்கான கட்டணம் ரூ.459 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு அக்டோபர் 19 (இன்று) முதல் அமலுக்கு வந்தது.

இதேபோல ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு குறைந்த பட்ச வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கான   கட்டணங்களை குறைத்துள்ளது. இலவச காலிங் வசதி, குறுஞ்செய்தி சேவை, அன்லிமிட்டட் டேட்டா சேவை ஆகியவற்றை ஒரு வார காலத்துக்கு வழங்குவதற்கான கட்டணம் ரூ.52 எனவும், 2 வார காலத்துக்கு ரூ.98 என்றும்  ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேபோல தினசரி 2 ஜிபி டேட்டா அளிக்கும் ரூ.509 மதிப்புள்ள  திட்டத்துக்கான வேலிடிட்டி நாட்கள் 56 தினங்களில் இருந்து, 49 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல 3 மாதங்களுக்கு 90 ஜிபி 4ஜி டேட்டாவை அளிக்கும் ரூ.999 மதிப்பு பிளானில், டேட்டாவின் அளவு மட்டும் 60 ஜிபியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது வரை ஜியோவின் அனைத்து திட்டங்களும் அன்லிமிட்டட் குரல்வழி சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. இது ரோமிங் நேரத்திலும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com