குஜராத் தேர்தல் தேதியை பிரதமரே அறிவிக்க தேர்தல் ஆணையம் காத்திருப்பா?: டுவிட்டரில் ப.சிதம்பரம் கேள்வி

குஜராத் தேர்தல் தேதியை பிரதமரே அறிவிக்க தேர்தல் ஆணையம் காத்திருப்பா?: டுவிட்டரில் ப.சிதம்பரம் கேள்வி

குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பை பிரதமரே அறிவிக்க தேர்தல் ஆணையம் காத்திருக்கிறதா? என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்

புதுதில்லி: குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பை பிரதமரே அறிவிக்க தேர்தல் ஆணையம் காத்திருக்கிறதா? என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார். 

குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் டுவிட்டரில் கிண்டலாக சில கருத்துகளைப் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், " குஜராத்தில் பாஜக அரசு குஜராத் வாக்காளர்களை கவரும் வகையில் இறுதி கட்ட இலவசங்கள் மற்றும் திட்டங்களை அறிவிக்க அவகாசம் தரப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அங்கு சுற்றுப்பயணம் செய்து, பொதுக்கூட்டத்தில் அறிவிப்புகளை வெளியிடும் வரை தேர்தல் தேதி அறிவிக்காமல் கால தாமதம் செய்து வருகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது" என பதிவிட்டுள்ளார். 

கடந்த 12-ஆம் தேதி, தேர்தல் ஆணையம் ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. அன்றைய தினம் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல், டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் குஜராத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று மட்டும் தெரிவித்திருந்தது.

ஆனால், குஜராத் தேர்தல் தேதியை விரைவில் அறிவிப்பதாக கூறிய தேர்தல் ஆணையம், இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com