அர்ச்சகரை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.4 லட்சம் உதவித்தொகை: தெலங்கானா அரசு அதிரடி அறிவிப்பு!

2017 நவம்பர் மாதம் முதல் அர்ச்சகரை திருமணம் செய்பவர்களுக்கு ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தை
அர்ச்சகரை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.4 லட்சம் உதவித்தொகை: தெலங்கானா அரசு அதிரடி அறிவிப்பு!

ஹைதராபாத்: 2017 நவம்பர் மாதம் முதல் அர்ச்சகரை திருமணம் செய்பவர்களுக்கு ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தை தெலங்கானா அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரித்துள்ளார்.

கடந்த காலங்களில் போலல்லாமல், பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த நாட்களில் மணமகன்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த பணம் சம்பாதிப்பவர்களையும், மென்பொருள் என்ஜினியர்கள் மற்றும் கை நிறைய சம்பாதிக்கும் ஆண்களையே மணமகனாக, மருமகனாக தேர்வு செய்வதால் கோவில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றும் பிராமண வகுப்பை சேர்ந்தவர்களுக்கு  ஊதியம் குறைவாக கிடைப்பதால் அவர்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் தயக்கம் காட்டுவதால் அவர்களுக்கு திருமணம் என்பது கடினமான ஒன்றாக கூறப்படுகிறது. இவர்களுக்கு வருமானம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இதனால் அர்ச்சகர்களுக்கு திருமணம் ஆவதில் தாமதம் ஏற்படுகிறது. பலர் திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

இதற்கு தீர்வு காணும் வகையில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. 

இது குறித்து தெலுங்கானா மாநில பிராமண நலவாரிய தலைவரும், முதல்வரின் ஆலோசகருமான ரமணாச்சாரி கூறியதாவது:

இதற்காக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ‘கல்யாண மஸ்து’ என்ற திட்டத்தை அமல்படுத்த உள்ளார்.

இதன்படி பிராமண வகுப்பை சேர்ந்த கோவில் அர்ச்சகர்களை திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு திருமணத்துக்கு முன்பே செலவுக்காக ரூ.1 லட்சம் வழங்கப்படும். திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதி பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மணமகனும் மணமகளும் இணைந்த வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்யப்படும். இந்த பணத்தை அவர்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு வட்டியுடன் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த திட்டம் வருகிற நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த திட்டம் அவர்களுக்கு சில நிதி ஆதாரங்களை தருகிறது, இதனால் வருங்காலத்தில் மணமகள் அவர்களை திருமணம் செய்து கொள்ள முன்வரலாம்".

"இந்த மூன்று ஆண்டு காலகட்டத்தில் தம்பத்தியனருக்கு குழந்தைகள் வந்துவிட்டாலும் குடும்பத்திற்கு எந்தவொரு நிதியியல் பிரச்சனையும் இருக்காது என்பது எங்கள் நோக்கம்" என்று ராமச்சந்திரன் தெரிவித்தார்.

"திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு தம்பதியர்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை. ஒவ்வொரு திருமணத்திற்கும் தகுதி வாய்ந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் திருமண ஊக்கத்தொகை வழங்கப்படும்".

அர்ச்சகர்களுக்கு சம்பளங்கள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் கோவில் அர்ச்சகர்கள் சமுதாயத்தில் மரியாதைக்குரிய இடம் பெறுவார்கள். "தற்போதைய ஊக்கத் திட்டத்துடன், தகுதிவாய்ந்த இளம் அர்ச்சகர்களும் வரவிருக்கும் நாட்களில் பொருத்தமான கூட்டணியைப் பெறுவாராகள் என்று அவர் கூறினார்.

மாநிலத்தில் 4,805 கோவில்களின் அர்ச்சகர்கள் நவம்பர் முதல் அரசாங்க ஊதியம் பெறும் வகையில் சம்பளங்கள் அறிவிக்கப்படும் என்று தெலங்கானா அரசாங்கம் அறிவித்திருந்தது. 

கடந்த மாதம், அனைத்து அர்ச்சகர்களும் (குருக்கள்) மற்றும் மற்ற கோவில்களில் பணியாற்றும் ஒவ்வொரு அரசாங்க ஊழியரும் ஒரு சம்பள அளவுடன் சம்பளம் பெறுவார்கள் என்றும் "அவர்களது சம்பளங்கள் மற்ற அரசாங்க ஊழியர்களுடன் சேர்ந்து திருத்தியமைக்கப்படும் என்று முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com