அந்தமானில் முப்படையினருடன் தீபாவளி கொண்டாடிய நிர்மலா சீதாராமன்

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்தமான் நிகோபார் தீவுகளில் முப்படை வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையை வியாழக்கிழமை கொண்டாடினார்.
அந்தமான் நிகோபார் தீவுகளில் முப்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அந்தமான் நிகோபார் தீவுகளில் முப்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்தமான் நிகோபார் தீவுகளில் முப்படை வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையை வியாழக்கிழமை கொண்டாடினார்.
இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, இரண்டு நாள் பயணமாக, அவர் அந்தமான்-நிகோபார் தீவுகளுக்கு புதன்கிழமை வந்தார். போர்ட் பிளேரில் உள்ள ஐஎன்எஸ் உத்குரோஷ் கடற்படைத் தளத்தில் அவரை, அந்தமான் துணைநிலை ஆளுநர் டி.கே.ஜோஷி, கடற்படை துணைத் தளபதி விமல் வர்மா ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், தமக்கு அளிக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, முப்படைகளின் தயார் நிலை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் அவரிடம் உயரதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, முப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை கொண்டாடினார்.
பிறகு, அந்தமான் சிறையில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரசாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று அவருடைய உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர். பின்னர், கார் நிகோபார் தீவுகளில் சுனாமி பேரழிவின்போது உயிரிழந்த விமானப் படை வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நிர்மலா சீதாரமன் அஞ்சலி செலுததினார்.
பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக, அவர் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு வந்துள்ளார். அவரது இந்தப் பயணம் முக்கியத்தும் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com