இந்திய - ரஷிய கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடக்கம்

இந்தியா மற்றும் ரஷியாவின் பாதுகாப்புப் படைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் 10 நாள் கூட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை (அக். 20) தொடங்குகிறது.

இந்தியா மற்றும் ரஷியாவின் பாதுகாப்புப் படைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் 10 நாள் கூட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை (அக். 20) தொடங்குகிறது. இந்த நடவடிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஷியாவில் நடைபெறும் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய போர் விமானங்கள், கப்பல்கள், மற்றும் ராணுத் தளவாடங்கள் அந்நாட்டுக்குச் சென்றுள்ளன. இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்திய - ரஷிய முப்படைகளின் கூட்டுப் பயிற்சியானது இரு நாடுகளுக்கும் உள்ள பொதுவான பிரச்னைகளையும், சவால்களையும் ஒருங்கிணைந்து களைவதற்கு வழிகோலும். அதுமட்டுமன்றி, இந்த நடவடிக்கையானது பரஸ்பரம் ராணுவப் பயிற்சி வழிமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும். பிற நாட்டுக்குச் சென்று இந்திய பாதுகாப்புப் படைகள் மிகப் பெரிய அளவில் கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஐஎல்-76 ரக போர் விமானம், அதிநவீன போர்க் கப்பல்கள் ஆகியவை ரஷியாவின் விளாதிவோஸ்டோக் நகருக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com