காஷ்மீர் எல்லையில் ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடினார் மோடி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குரேஸ் எல்லைப் பகுதியில் ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். 
காஷ்மீர் எல்லையில் ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடினார் மோடி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குரேஸ் எல்லைப் பகுதியில் ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். 
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள இந்தப் பகுதிக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மோடி பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
குருஸ் பள்ளத்தாக்குப் பகுதியானது, கடந்த 27 ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்களுக்கு இலக்காகி வருவதுடன், பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிக அளவில் நடைபெறும் இடமாகவும் உள்ளது.
தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக எல்லைப் பகுதிக்குச் சென்று ராணுவ வீரர்களுடன் மோடி, தீபாவளியைக் கொண்டாடியுள்ளார். 
குரேஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் ராணுவ வீரர்களுடன் சுமார் 2 மணி நேரம் வரை மோடி இருந்தார். ராணுவ தலைமைத் தளபதி பி.எஸ். ராவத் உள்ளிட்ட மூத்த ராணுவ அதிகாரிகளும் அப்போது உடன் இருந்தனர். வீரர்களுக்கு இனிப்பை ஊட்டிவிட்ட மோடி, அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
பின்னர் வீரர்கள் மத்தியில் பிரதமர் பேசியதாவது:
அனைவரையும் போல நானும் எனது குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட ஆசைப்பட்டேன். எனவேதான் உங்களைத் தேடி இங்கு வந்துள்ளேன். உங்கள் அனைவரையும் எனது குடும்பமாக கருதுகிறேன். 
இவ்வளவு கடினமான சூழ்நிலையில் வீரத்துடனும், தியாக உணர்வுடனும் பணியாற்றும் உங்களைப் பார்க்கும்போது எனக்குள் புதிய உத்வேகம் பிறக்கிறது.
நீங்கள் அனைவரும் யோகாசனப் பயிற்சி பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சிறந்த யோகா பயிற்சியாளராக பணியாற்ற முடியும். முப்படையினரின் நலனுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. 
எனவேதான், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
உங்கள் அன்புக்குரியவர்களை விட்டு வெகுதூரம் கடந்து வந்து தாய்நாட்டைக் காக்க இங்கு ஒன்று கூடியுள்ளீர்கள். 
இதுதான் தியாகத்தின் உச்சம். நாட்டைக் காக்க எல்லையில் போராடும் வீரர்கள் அனைவருமே சிறந்த வீரத்துக்கு அடையாளமாக விளங்குகிறார்கள் என்றார் மோடி.
பின்னர் சுட்டுரையில் (டுவிட்டர்) இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குரேஸ் பள்ளத்தாக்கில் நமது வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடியது மகிழ்ச்சியளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com