பிஎஸ்எஃப் வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய குஜராத் முதல்வர்

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுடன் அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி தீபாவளிப் பண்டிகையை வியாழக்கிழமை கொண்டாடினார்.

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுடன் அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி தீபாவளிப் பண்டிகையை வியாழக்கிழமை கொண்டாடினார்.
இதுகுறித்து குஜராத் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அரபிக் கடலையொட்டிய லேக்பத் பகுதி அருகே உள்ள சர் கிரீக் பகுதியில் பிஎஸ்எஃப் வீரர்களுடன் முதல்வர் விஜய் ரூபானி அவரது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார். அப்போது, அவர் பிஎஸ்எஃப் வீரர்களிடம் பேசியதாவது: நாம் அனைவரும் ஒரே குடும்பம். தீபாவளிப் பண்டிகையைக் குடுபத்தினருடன் (உங்களுடன்) கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. அரபிக் கடலில் மிகக் கடினமான சூழ்நிலையிலும்கூட உயிரைப் பணயம் வைத்து நீங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பு பனஸ்கந்தா பகுதியில் உள்ள பாதுகாப்புச் சாவடிக்குச் சென்றேன். அங்கு செல்லிடப்பேசிக்கு சிக்னல் அளிக்கும் கோபுரம் அமைக்கப்படும் என்று அவர்களுக்கு உறுதி அளித்திருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். அதுபோல், இந்தப் பகுதியிலும் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கப்படும். உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் செல்லிடப்பேசியில் பேசலாம். உங்களுக்குத் தூய்மையான குடிநீர் விநியோகிக்கப்படும். நீங்கள் தங்கியிருக்கும் இடங்களில் ஏர் கூலர்கள் பொருத்தப்படும். இதன்மூலம், சுட்டெரிக்கும் வெயில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ள முடியும் என்று விஜய் ரூபானி பேசினார்.
முன்னதாக, முதல்வர் விஜய் ரூபானியும், அவரது மனைவி அஞ்சலியும் ஆஷாபுரா மாதாஜி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வடமாநிலங்களில் தீபாவளி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com