ரூ.450 கோடி ஊழலில் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்: எடியூரப்பா

கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா சனிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
ரூ.450 கோடி ஊழலில் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்: எடியூரப்பா

கர்நாடக முதல்வர் சித்தராமையா நிலக்கரி ஒப்பந்தம் தொடர்பாக ரூ.450 கோடி வரை ஊழல் செய்திருப்பதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எடியூரப்பா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் எடியூரப்பா பேசியதாவது:

கர்நாடக மின் உற்பத்தி நிறுவனத்தின் தலைவராக முதல்வர் சித்தராமையா உள்ளார். அதில், தனியார் நிறுவனத்துடனான மின் உற்பத்தி ஒப்பந்தம் தொடர்பாக அவர் ஊழலில் ஈடுபட்டுள்ளார். இதற்கு மின்துறை அமைச்சர் டி.கே.ஷிவகுமார் உடந்தையாக செயல்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனத்துடனான அந்த ஒப்பந்ததில் அவர்களின் சார்பாக அரசு மின் உற்பத்தி கழகத்துக்கு கர்நாடக அரசு சார்பாக ரூ.457 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு தரப்பில் இருந்து இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து முதல்வர் சித்தராமையா நிச்சயம் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு அவர் முழுபொறுப்பேற்க வேண்டும்.

இதுதொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். ஏனென்றால் இது மிகப்பெரிய ஊழலாகும். எனவே இது நிச்சயம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com