கோடீஸ்வரர்களாக வாழும் மாவோயிஸ்டு குடும்பத்தினர்: பின்னணியில் பகீர் தகவல்

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடும்  மாவோயிஸ்டுகளைப் பற்றி பிகார் காவல்துறையின் சிறப்பு பாதுகாப்புப் படைத் தயாரித்த உளவு அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோடீஸ்வரர்களாக வாழும் மாவோயிஸ்டு குடும்பத்தினர்: பின்னணியில் பகீர் தகவல்


பாட்னா: ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடும்  மாவோயிஸ்டுகளைப் பற்றி பிகார் காவல்துறையின் சிறப்பு பாதுகாப்புப் படைத் தயாரித்த உளவு அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு மாவோயிஸ்ட் தலைவர்களின் குடும்பத்தினர் கோடீஸ்வரர்களாக வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

மாவேயிஸ்டுகள், அப்பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் சாலை ஒப்பந்ததாரர்களிடம் ஒவ்வொரு ஆண்டும் கணிசமான தொகையை மிரட்டி வாங்கி வருகிறார்கள். இவர்கள் ஆண்டு தோறும் வசூலிக்கும் பணம் எவ்வளவு என்றால் ரூ.1000 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது, இரண்டு மாவோயிஸ்டு தலைவர்களின் குடும்பத்தினர் பற்றிய தகவல் என்ன சொல்கிறது என்றால், இரு குடும்பங்களும் தலா 1.2 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருக்கிறது என்பதுதான்.

ஒரு மாவோயிஸ்டு தலைவரின் பெயர் சந்தீப் யாதவ், பிகார் - ஜர்க்கண்ட் சிறப்புப் பகுதி பொறுப்பாளர். இவர் மீது 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இவரது தலைக்கு ரூ.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவரது மூத்த மகன், மிகப்பெரிய கல்லூரியில் படித்து வருகிறார், தாயாருடன் வசித்து வரும் 2வது மகனும் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த இரண்டு பேரிடமும் பல லட்சம் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக் உள்ளது. மகளும் மிகப்பெரிய பள்ளியில் படித்து வருகிறார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சந்தீப்பின் மனைவி ராஜந்தி, ஒரு பள்ளியின் ஒப்பந்த ஆசிரியராக வேலை செய்கிறார். அவர் பல ஆண்டுகளாக பள்ளிக்கே செல்வதில்லை என்றாலும் மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படுகிறது. என்றாலும் இதுவரை இது பற்றி ஒரு புகாரும் எழுந்ததில்லை.

இவர்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. வீடு, இடம், வங்கிக் கணக்கில் பெரிய தொகை என கோடீஸ்வரர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இதேப்போல, பிரத்யுமன் என்ற மற்றொரு மாவோயிஸ்டின் சகோதரருக்கு மட்டும் 250 ஏக்கர் நிலம் உள்ளது. அவரது  மகள் தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவக் கல்லூரியில் ரூ.22 லட்சம் நன்கொடை கொடுத்து சேர்க்கை பெற்றுள்ளார். அவர் கல்லூரிக்கு வந்து செல்ல சாலைப் போக்குவரத்தையே நாடுவதில்லை. விமானம்தான்.

மேல் நடவடிக்கைக்காக, இந்த உளவு அறிக்கை அமலாக்கத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com