குஜராத் பேரவைத் தேர்தல்: ஹார்திக் படேலுக்கு காங்கிரஸ் அழைப்பு

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக, ஹார்திக் படேலைப் போன்று பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
குஜராத் பேரவைத் தேர்தல்: ஹார்திக் படேலுக்கு காங்கிரஸ் அழைப்பு

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக, ஹார்திக் படேலைப் போன்று பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் ஆட்சியமைக்க முடியாமல் கடந்த 22 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்நிலையில், நிகழாண்டு இறுதியில், பல்வேறு சமூகங்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அக்கட்சி உள்ளது.
இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் பரத்சிங் சோலங்கி, ஆமதாபாதில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குஜராத் பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன், பல்வேறு சமூகத் தலைவர்களின் ஆதரவுடன், மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 125 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி எளிதில் வெற்றி பெற்று விடும்.
படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி ஹார்திக் படேல் போராடினார். அவரது போராட்டத்துக்கான நியாயத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டு, அதற்கு மதிப்பளிக்கிறது.
எதிர்வரும் குஜராத் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஹார்திக் படேல் ஆதரவு தர வேண்டும். அவர் தேர்தலில் போட்டியிட விரும்பினால், அவருக்கு தேர்தலில் சீட் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். இதேபோல், தாக்குர் சமூகத் தலைவர் அல்பேஷ் தாக்குர், தலித் சமூகத் தலைவர் ஜிக்னேஷ் மேவானி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
இவர்களைத் தவிர, மாநிலங்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஒரே எம்எல்ஏவான சோட்டு வசவாவுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
மாநிலங்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்துவிட்டது. 
இருப்பினும், குஜராத் மாநிலத்தில் இருந்து பாஜகவை அவர்கள் வெளியேற்ற விரும்பினால், அவர்களின் ஆதரவை ஏற்பதற்கு காங்கிரஸ் கட்சி தயாராகவே இருக்கிறது.
இதுதவிர, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கனுபாய் கல்சாரியா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் குஜராத் மாநிலத்துக்கு வந்தபோது அவரை சந்தித்துப் பேசினார்.
கனுபாய் கல்சாரியாவைப் போன்று மேலும் சில ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும், குஜராத் தேர்தலுக்கு முன், காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாவார்கள் என்று எதிர்
பார்க்கிறோம். மொத்தத்தில், இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது என்றார் பரத்சிங் சோலங்கி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com