குஜராத்தில் மோடி இன்று சுற்றுப் பயணம்

இந்த ஆண்டின் இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள குஜராத் மாநிலத்தில், பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (அக். 22) சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
குஜராத்தில் மோடி இன்று சுற்றுப் பயணம்

இந்த ஆண்டின் இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள குஜராத் மாநிலத்தில், பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (அக். 22) சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்த மாதத்தில் மட்டும் தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு மூன்றாவது முறையாகச் செல்லும் மோடி, அந்த மாநிலத்தின் பாவ்நகர் மற்றும் வதோதரா மாவட்டங்களில் பல்வேறு திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.
குஜராத்தின் காம்பே வளைகுடாவை ஒட்டியுள்ள பாவ்நகர் மாவட்டத்தின் கோகா நகரையும், பாரூச் மாவட்டத்தைச் சேர்ந்த தஹேஜ் நகரையும் இணைக்கும் ரூ.615 கோடி மதிப்பிலான நீர்வழிச் சாலைத்திட்டத்தின் முதல்கட்டப் போக்குவரத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.
இந்த இரு நகரங்களுக்கும் இடையே தற்போது உள்ள 310 கி.மீ. பயண தூரத்தை, வெறும் 30 கிலோ மீட்டராக சுருக்கும் இந்தத் திட்டத்தை தனது கனவுத் திட்டம் என நரேந்திர மோடி காந்திநகரில் கடந்த திங்கள்கிழமை பேசியது குறிப்பிடத்தக்கது.துவக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியா கோகா நகரிலிருந்து தஹேஜ் வரை படகு மூலம் செல்லவிருக்கும் மோடி, அங்கிருந்து வதோதரா புறப்படுகிறார்.
கோகா-தஹேஜ் இடையே நரேந்திர மோடியால் தொடங்கப்படும் முதல்கட்டப் படகுப் போக்குவரத்தில், பயணிகளுக்கு மட்டும் சேவையளிக்கப்படும் எனவும், இன்னும் 2 மாதங்களில் நிறைவடையும் இரண்டாம் கட்டப் போக்குவரத்தில், படகு மூலம் இரு நகரங்களுக்கு இடையே கார்களை எடுத்துச் செல்வதற்கான சேவையும் அளிக்கப்படும் என இந்தத் திட்டத்தின் தலைமை செயலதிகாரி அஜய் பாது தெரிவித்தார்.
இந்தத் திட்டம், குஜராத் மாநிலத்தின் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, கடந்த 2012-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் அவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. வதோதரா மாவட்டத்தில், ரூ.1,140 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டவிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com