நாடு முழுவதும் ரயில் பாலங்களை ஆய்வு செய்ய ரயில்வே வாரியம் உத்தரவு

நாடு முழுவதும் உள்ள ரயில் பாலங்களின் நிலைமையை மறு ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் ரயில் பாலங்களை ஆய்வு செய்ய ரயில்வே வாரியம் உத்தரவு

நாடு முழுவதும் உள்ள ரயில் பாலங்களின் நிலைமையை மறு ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு ரயில்வே மண்டலங்களில், பழுதடைந்த நிலையில் உள்ள 275 ரயில் பாலங்களில், 23 பாலங்களில் மட்டுமே வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதும், மற்ற 252 பாலங்களில் ரயில்கள் அபாயகரமான முறையில் முழு வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படுவதும் அண்மையில் தெரிய வந்ததையடுத்து, இந்த உத்தரவை ரயில்வே வாரியம் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் தங்களது மண்டலங்களைச் சேர்ந்த, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைப் பழுது ஏற்பட்டுள்ள அனைத்து பாலங்களின் நிலைமையையும் மறு ஆய்வு செய்யும்படி, பாலங்களுக்கான அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தகைய பாலங்களின் உறுதித் தன்மையை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ரயில்வே மண்டலங்கள் சரியான முறையில் செயல்படுத்துவதில்லை என்று தெரிகிறது.
மேலும், மண்டல மற்றும் தலைமையக அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, ரயில்வே பாலங்களின் உறுதித் தன்மையை வெளிப்படுத்தும் தர வரிசை, மிகச் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்றும் கருதப்படுகிறது.
சில மோசமான ரயில் பாலங்களில் கூட வேகக் கட்டுப்பாடுகளையும், முறையான பராமரிப்புப் பணிகளையும் மண்டலப் பொறியாளர்கள் பரிந்துரைக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், மிக மோசமான முதல் மற்றும் இரண்டாம் நிலைப் பழுதுகள் இல்லாத நிலையிலும், சில ரயில் பாலங்களில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தக் குறைபாடுகளைக் களையும் வகையில், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மண்டல ரயில்வே பெறியளர்களும் ரயில் பாலங்களுக்கு வழங்கியுள்ள தர நிர்ணயங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழுதடைந்த ரயில் பாலங்களுக்குப் பதிலாக புதிய பாலங்களைக் கட்ட அனுமதி வழங்குவது தேவையில்லாமல் தாமதிக்கப்படுவதாகவும், இதனால் பழைய பாலங்கள் வழியாகச் செல்லும் ரயில்கள் மெதுவாக இயக்கப்படுவதால் ரயில்வே துறைக்கு அதிக செலவு பிடிப்பதாகவும் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) கடந்த 2015-ஆம் ஆண்டைய அறிக்கையில் குறை கூறியிருந்தது நினைவுகூரத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com