நாளை பிலிப்பின்ஸ் செல்கிறார் நிர்மலா சீதாராமன்

தென்கிழக்கு ஆசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் (ஏடிஎம்எம்-பிளஸ்) கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை (அக். 23) பிலிப்பின்ஸ் செல்கிறார்.
நாளை பிலிப்பின்ஸ் செல்கிறார் நிர்மலா சீதாராமன்

தென்கிழக்கு ஆசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் (ஏடிஎம்எம்-பிளஸ்) கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை (அக். 23) பிலிப்பின்ஸ் செல்கிறார்.
நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக, அவர் வெளிநாடு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பின்ஸில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவர், தெற்காசியாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு ஆசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் மாநாடு, திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகி இரு நாள்களுக்கு நடைபெறும்.
இந்த மாநாட்டில், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாடுகளில் நடைபெறும் உள்நாட்டுப் போர் குறித்த நிலவரம், தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பதற்றம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மண்டலப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது
குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டைக் குறித்து நிர்மலா சீதாராமன் சக பாதுகாப்புத் துறை அமைச்சர்களிடையே விவரிப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட ஆசியான் நாடுகளும், இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளும் இணைந்த ஏடிஎம்எம்-பிளஸ் மாநாடு, வியத்நாமின் தலைநகரான ஹனோய் நகரில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் முறையாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com