முத்திரை தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கி மருத்துவமனையில் அனுமதி!

முத்திரை தாள் மோசடி தொடர்பான வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் அப்துல் கரீம் தெல்கி...
முத்திரை தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கி மருத்துவமனையில் அனுமதி!

பெங்களூரு: முத்திரை தாள் மோசடி தொடர்பான வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் அப்துல் கரீம் தெல்கி, உயிருக்கு ஆபத்தான் நிலையில் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டு உள்ளார்.

பல்லாயிரம் கோடி முத்திரை தாள் மோசடி தொடர்பான வழக்கில் 2001-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அஜ்மீர் நகரில் கைது செய்யப்பட்டவர் அப்துல் கரீம் தெல்கி. அவருக்கு 30 ஆண்டு கடும் சிறைத் தண்டனையும், ரூ.202 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தெல்கி கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார். .

தெல்கிக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் உள்ளிட்ட பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் அப்துல் கரீம் தெல்கி சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் அவருக்கு முன்னுரிமை அளித்து உதவி செய்து வருவதாக சிறைத்துறை டிஐஜி ரூபா தெரிவித்து வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பெங்களூர் பரப்ப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் அப்துல் கரீம் தெல்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது வழக்குரைஞர் எம்.டி.நானையா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடந்த சில தினங்களாகவே தெல்கிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. மூளை தண்டுவட நோயால் பாதிக்கப்பட்ட அவரது உடல்நிலை நேற்று இரவு மோசம் அடைந்தது. 

இதைத்தொடர்ந்து, அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட அவர் வெண்டிலெட்டர் மூலம் சுவாசித்து வருகிறார். தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். தெல்கி ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக அவரது வழக்குரைஞர் எம்.டி.நானையா தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com