15 வயதில் தாயாகி, 18 வயதில் மனைவியாகி இருக்கும் ராஜஸ்தானியப் பெண்!

இந்தியா முழுவதும் சாதி வெறியால் ஆணவக் கொலைக்கு காதலர்கள் உள்ளாகி வரும் நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த இவர்கள் பல பிரச்னைகளை தாண்டி அரசின் உதவியுடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
15 வயதில் தாயாகி, 18 வயதில் மனைவியாகி இருக்கும் ராஜஸ்தானியப் பெண்!

இந்தியா முழுவதும் சாதி வெறியால் ஆணவக் கொலைக்கு காதலர்கள் உள்ளாகி வரும் நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த இவர்கள் பல பிரச்னைகளை தாண்டி அரசின் உதவியுடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ராஜஸ்தானின் டோல்பூர் பகுதியைச் சேர்ந்த அனு பாகெல் என்னும் பெண் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த சச்சின் குமார் என்பவரைக் கடந்த 2014-ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருதரப்பு குடும்பத்தாரும் இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.  

இரு குடும்பத்தாரும் இவர்களைத் தேடி எப்படியோ கண்டுபிடித்த நிலையில் பாகெல் கர்ப்பமாக இருந்துள்ளார். அப்போது பாகெலின் வயது 15 மற்றும் சச்சினின் வயது 21 என்பதால் இவர்களது திருமணம் செல்லாமல் போனது. அதனால் பெண் வீட்டார் சச்சின் தங்களது மகளைக் கடத்தி கற்பழித்து விட்டதாகக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து சச்சினை கைது செய்த காவல் துறை அவரைச் சிறையில் அடித்தது. எனவே பாகெல் குழந்தையை திருமணத்திற்கு முன்பே பெற்றெடுத்தார். இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சச்சின் குற்றமற்றவர் என்று நிரூபணமாகி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அக்டோபர் 16-ம் தேதி பாகெல் 18 வயது நிறைவு பெற்றதால் டோல்பூர் குழந்தைகள் நலக் குழு அவரை அழைத்து அவரது விருப்பம் பற்றி கேள்வி எழுப்பியது. அதற்குத் தான் சச்சினை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக பாகெல் தெரிவித்ததால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அந்தக் குழு முடிவு செய்தது. அதன்படி இருவரது திருமணமும் நேற்று நடைபெற்றது. திருமணத்திற்குப் பெண் வீட்டார் யாரும் வாரவில்லை என்றாலும், குழந்தைகள் நலக் குழுவில் இருந்து பலரும் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர். தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தையுடன் இவர்களது திருமணம் நடைபெற்றது.

சச்சினின் குடும்பத்தார் பாகெலை தங்களது முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதாகவும், தங்கள் மருமகள் பேத்தியுடன் எங்கள் வீட்டிற்கு வருவது தங்களின் அதிர்ஷ்டம் என்றும் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக அங்கீகரிக்கப் பட்டனர்.

இந்தியாவில் மட்டும் 2015-ல் மேற்கொண்ட ஆய்வின்படி 251 ஆணவக் கொலைகள் அந்த ஒரு வருடம் மட்டும் நிகழ்ந்துள்ளது. தங்களது குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற தான் பெற்ற பிள்ளைகளையே கொள்ளும் பெற்றோர்களுக்கு எதிராகப் பல சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை இந்திய அரசும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com