மதுபான கடைகளில் மகளிரை வேலைக்கு நியமிக்கலாம்: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி

கேரளாவில் அரசு மதுபான கடைகளில் பெண்களை விற்பனையாளர்களாக நியமிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபான கடைகளில் மகளிரை வேலைக்கு நியமிக்கலாம்: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு மதுபான கடைகளில் மகளிரை விற்பனையாளர்களாக நியமிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் அரசு மதுபான விற்பனைக் கழகத்தின் சார்பில் 350க்கு மேற்பட்ட சில்லரை மது விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஆண்கள் மட்டுமே விற்பனையாளர்களாக உள்ளனர். 

இந்நிலையில், அரசின் பானுவேரர்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் பிற ஏஜென்சிகளுக்கு சொந்தமான மது விற்பனை நிலையங்களில் விற்பனையாளர்களாக பணிபுரிய மகளிரை நியமிக்க வேண்டும் என கொச்சியை சேர்ந்த சில மகளிர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். 

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு மதுக்கடை பணிகளில் ஆண், பெண் என பாகுபாடு பர்க்கக்கூடாது. மகளிரையும் விற்பனையாளர்களாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, அரசு மதுபான கடைகளில் மகளிரை பணியமர்த்துவதற்கான சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வரவும் அதனை கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்வதற்கு அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கையின்படி ஆண்கள் மற்றும் மகளிர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கும் என்று மகளிர் சார்பில் வாதிடப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com