டிவிட்டரில் எனது புகழுக்கு யார் காரணம்? ராகுல் காந்தியின் விளையாட்டு ட்வீட்டும் வேண்டாத வம்பும்! 

பிரபல சமுக வலைத்தளமான டிவிட்டரில் தனது 'திடீர்' புகழுக்கு  யார் காரணம் என்பது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்ட நகைச்சுவையான ட்வீட் ஒன்று, அவருக்கு மீண்டும் பிரச்சினையைத்... 
டிவிட்டரில் எனது புகழுக்கு யார் காரணம்? ராகுல் காந்தியின் விளையாட்டு ட்வீட்டும் வேண்டாத வம்பும்! 

புதுதில்லி: பிரபல சமுக வலைத்தளமான டிவிட்டரில் தனது 'திடீர்' புகழுக்கு  யார் காரணம் என்பது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்ட நகைச்சுவையான ட்வீட் ஒன்று, அவருக்கு மீண்டும் பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளமான டிவிட்டரில் ஆர்வமாக செயல்பட்டு வருபவர். சமீப காலமாக இவர் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி  தொடர்பாக தொடர்ந்து தனது கருத்துக்களை நகைச்சுவை  கலந்து கிண்டல் கொப்பளிக்க வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாக டிவிட்டரில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அத்துடன் அவருக்கு எதிரானவர்கள் ராகுலின் சமீபத்திய ட்வீட்டுகள் எல்லாம் அவரால் பதிவிடப்படவில்லை. அதற்கென ஒரு சமூக வலைத்தள நிபுணர்கள் கொண்ட குழு ஒன்று செயல்பட்டு வருவதாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் தனது வளர்ப்பு நாயே தன்னுடைய திடீர் டிவிட்டர் புகழுக்கு காரணம் என்று கிண்டலாகத் தெரிவித்திருந்தார்.அத்துடன் ராகுலின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து அந்த நாய் உணவு உண்பது போன்ற விடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அத்துடனான குறிப்பில், 'இந்த நபரது புகழுக்கு யார் காரணம் என்று கேட்கிறார்கள்..நான்தான் பிதி ...நான் இவரை விட திறமையானவன்..என்ன செய்கிறேன் என்று பாருங்கள் என்று அந்த நாய் கூறுவதாக  தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராகுலின் இந்த ட்வீட்டானது வைரலாகப் பரவியது. இதற்கு முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரும், தற்பொழுது அஸ்ஸாம் பாரதிய ஜனதா கட்சி அமைச்சருமான ஹிமந்தா பிஸ்வாஸ் ஷர்மா  டிவிட்டரில் பதில் அளித்திருந்தார். அவர் அதில், 'நீங்கள் கூறுவதை என்னை விட தெரிந்தவர் யார் இருக்க முடியும் சார்? 2016-ஆம் ஆண்டு அஸ்ஸாம் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் உங்களை சந்தித்து முக்கிய ஆலோசனைகள் நடத்த நாங்கள் வந்திருந்த பொழுது நீங்கள் இதற்கு பிஸ்கட் கொடுப்பதில்தானே பிசியாக இருந்தீர்கள்? என்று தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக ராகுலுக்கு பாஜக தலைவர்களுக்கும் இடையிலான டிவிட்டர் சண்டை மீண்டும் தொடர்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com