சுவிஸ் என்றாலே கருப்புப் பணம் மட்டுமில்லை; சொல்வதற்கு எவ்வளவோ இருக்கு!

சுவிஸ் என்றாலே, இந்தியாவின் கருப்புப் பணத்தை பதுக்கி வைக்கும் வங்கிகள் மட்டும்தான் என்று நினைத்திருப்பவர்களுக்கு, சுவிட்சர்லாந்து - இந்தியா இடையேயான உறவு 
சுவிஸ் என்றாலே கருப்புப் பணம் மட்டுமில்லை; சொல்வதற்கு எவ்வளவோ இருக்கு!

சுவிஸ் என்றாலே, இந்தியாவின் கருப்புப் பணத்தை பதுக்கி வைக்கும் வங்கிகள் மட்டும்தான் என்று நினைத்திருப்பவர்களுக்கு, சுவிட்சர்லாந்து - இந்தியா இடையேயான உறவு எத்தகைய முக்கியத்துவம் பெற்றது என்று அறிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

சுவிட்சர்லாந்தின் அதிபர் டோரிஸ் லியூதர்ட் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த நேரத்தில், இந்தியா - சுவிட்சர்லாந்து உறவு பற்றி நாம் பேசாவிட்டால் வேறு எப்போதுதான் பேசுவது சொல்லுங்கள்?

முதலில் எல்லோருக்கும் பிடித்த சினிமாவுக்கு வருவோம்... சினிமாவில் குக்கிராமத்தில் காதல் செய்யும் கதாநாயகனும், கதாநாயகியும் கூட ஆடிப் பாட செல்வது என்னவோ சுவிட்சர்லாந்துதான். மிகவும் புகழ்பெற்ற 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' என்ற ஹந்தி திரைப்படப் பாடலில் ஷாருக்கானும், கஜோலும் ஆடிப்படுவது நம்ம சுவிட்சர்லாந்தில்தான்.

பாலிவுட் படங்களின் படப்பிடிப்புகள் ஏராளமானவை சுவிட்சர்லாந்தில் நடந்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்தியர்கள் பலருக்கும் சுவிட்சர்லாந்து மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாறியது.

ஆல்ப்ஸ் மலையில் ஆயுர்வேதம்
சுவிட்சர்லாந்தில் சுற்றுலா செல்லும் இந்தியர்கள் பலருக்கும், ஆயுர்வேத மசாஜ் என்ற விளம்பரம் நிச்சயம் புருவங்களை உயர்த்தியே தீரும். மேற்கு நாடுகளில் ஆயுர்வேதத்தை பின்பற்றத் தொடங்கிய முதல் நாடு சுவிட்சர்லாந்து. அந்நாட்டின் பல இடங்களில் ஆயுர்வேத மருத்துவமனைகளும், கல்வி மையங்களும் இயங்கி வருகின்றன. ஒரு வேளை நீங்கள் சுவிட்சர்லாந்து சென்று, ஒரு சிறந்த ஆயுர்வேத மையத்தை அடைந்தால், அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து வியந்துதான் போவீர்கள். ஆம், அனைவரும் இந்தியர்கள் அல்ல, சுவிஸ் நாட்டுக்காரர்கள்தான். எந்த பக்க விளைவும் இல்லாத ஆயுர்வேத மருத்துவத்தின் மகிமையை அவர்கள் உணர்ந்து, அதனை கொண்டாடவும் செய்கிறார்கள்.

அலோபதி மருத்துவ சிகிச்சையால் பல்வேறு துயரங்களுக்கு ஆளான மக்கள் மாற்று மருத்துவத்தைத் தேடினர். அப்போது இந்தியாவின் மிகப் பழமையான மருத்துவமனை முறையான ஆயுர்வேதம்தான் அவர்களுக்குக் கை கொடுத்தது. 1987ம் ஆண்டு முதல் அங்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆயுர்வேத கல்வியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2013ம் ஆண்டு இந்தோ - ஸ்விஸ் ஆயுர்வேத ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் முதலீடு; வேலைவாய்ப்பு
அதிகாரப்பூர்வ புள்ளி விவரத்தின் அடிப்படையில், இந்தியாவில் சுவிட்சர்லாந்து செய்திருக்கும் முதலீடுகளால் சுமார் 1 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நெஸ்கஃபே அல்லது கிட்கேட் என ஏராளமான நிறுவனங்கள் இங்கு கால் பதித்துள்ளன. சுமார் 250க்கும் மேற்பட்ட சுவிஸ் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. சுவிட்சர்லாந்தின் மிக அதிக முதலீட்டைப் பெற்றிருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. 

இந்தியாவில் சுமார் 250 நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ள நிலைடியல், 1 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 10 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

எனவே, இனி சுவிட்சர்லாந்து என்றதும், இந்தியர்கள் சேர்த்த வருமானத்துக்கு மீறிய கருப்புப் பணத்தை பதுக்கி வைக்கும் வங்கிகள் நிறைந்த நாடு என்று மட்டும் நினைக்காமல், இதுபோன்ற விஷயங்களையும் நினைவு கூர்தல் நலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com