பழைய ரூபாய் நோட்டுகள் விவகாரம்: உண்மையை மூடி மறைக்கிறது ஆர்பிஐ: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தில், உண்மையை மூடி மறைப்பதாக ரிசர்வ் வங்கி மீது ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகள் விவகாரம்: உண்மையை மூடி மறைக்கிறது ஆர்பிஐ: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தில், உண்மையை மூடி மறைப்பதாக ரிசர்வ் வங்கி மீது ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

கருப்பு பணம், ஊழல் ஒழிக்கும் நடவடிக்கை என்று கூறி, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு கடந்த ஆண்டு நம்பவர் 9-ஆம் தேதி வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து, புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் 2016-17ஆம் ஆண்டுக்கான அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில்,  ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்படுவதற்கு முன்பு,  நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளில், 99 சதவீதம் அளவுக்கு வங்கிகளில் டெபாசிட் ஆகியுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் உண்மைகளை மூடி மறைப்பதாக ரிசர்வ் வங்கி மீது ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியதாவது:
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது, நாட்டில் ரூ.14.18 லட்சம் கோடிக்கு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், அதைவிட ஒரு ரூபாய் அதிகம் டெபாசிட் ஆனாலும் அது கள்ளநோட்டாகத்தான் இருக்கும் என்றும் ஆர்பிஐ கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

தற்போது வங்கிகளில் டெபாசிட் ஆன பழைய ரூபாய் நோட்டுகள் எண்ணும் பணி முடிந்து, அதன் விவரங்களை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. சுமார் 99 சதவீதம் அதாவது ரூ.15.28 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ரூபாய் நோட்டு வாபஸுக்கு முன் ரூ.15.44 லட்சம் கோடி பழைய நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான தகவலின்படி பார்த்தால், ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகள் 100 சதவீதத்துக்கும் அதிகமாகவே திரும்பிவந்துள்ளது தெரிகிறது.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, மோடி அரசின் மிகப் பெரிய மோசடி என்று ஏற்கெனவே நாங்கள் விமர்சித்தோம். ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்கு பொருளாதாரம் குறித்து எந்த புரிதலும் கிடையாது என்று சிலர் விமர்சித்தினர்.

இப்போது, நாங்கள் கூறியது உண்மை என்பது உறுதியாகிவிட்டது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பின்னர், பல்வேறு காரணங்களால் தங்களது பணத்தை டெபாசிட் செய்ய முடியாமல் நேர்மையான மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். அப்படியிருக்கும்போது, வங்கிகளில் டெபாசிட் ஆனது யாருடைய பணம்?

கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிவிட்டதாக பிரதமர் மோடியை புகழுகின்றனர். அப்படியென்றால், ஊழல், பயங்கரவாதம், நகஸ்ல் தீவிரவாதம் ஒழியும் என்று அவர் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? என்று சஞ்சய் சிங் கேள்வியெழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com