ஜப்பானில் பாதுகாப்பு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தை: ஜேட்லி பங்கேற்பு

பாதுகாப்புத் துறையின் புதிய அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றிருந்தாலும், ஜப்பானில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்பு தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தையில் மத்திய நிதியமைச்சர் அருண்
ஜப்பானில் பாதுகாப்பு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தை: ஜேட்லி பங்கேற்பு

பாதுகாப்புத் துறையின் புதிய அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றிருந்தாலும், ஜப்பானில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்பு தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்கவுள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கோவா மாநில முதல்வராகப் பொறுப்பேற்பதற்காக, தனது அமைச்சர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜிநாமா செய்தார். அதையடுத்து, பாதுகாப்புத் துறையை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூடுதலாகக் கவனித்து வந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைக்கப்பட்டது. அதில், வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு, பாதுகாப்புத் துறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜப்பானில் திங்கள்கிழமை நடைபெறும் மாநாட்டில் அருண் ஜேட்லி பங்கேற்கவுள்ளார்.
இதுதொடர்பாக, தில்லியில் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஜப்பானில் நடைபெறவுள்ள பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் நிர்மலா சீதாராமன்தான் பங்கேற்க வேண்டும். அவர், பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள போதிலும், இன்னும் பொறுப்புகளை ஏற்கவில்லை. மேலும், கடைசி நேரத்தில், பயணத் திட்டத்தை மாற்ற இயலவில்லை. அதுமட்டுமின்றி, ஜப்பான் பிரதமர் ஷின்úஸô அபே, இந்த மாதம் இந்தியா வரவிருப்பதால், எனது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
புதிய பொறுப்பு நிர்மலா எப்போது ஏற்பார்?: ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு நான் இந்தியா திரும்பிய பிறகு, பாதுகாப்புத் துறை அமைச்சராக, நிர்மலா சீதாராமன் பொறுப்புகளை ஏற்பார். எனவே, இன்னும் இரண்டு நாள்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சராகவே தொடருவேன். இதுவரை ஒத்துழைப்பு அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், ஆயுதப்படையைச் சேர்ந்தவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூத்த அமைச்சர்களில் ஒருவரான அருண் ஜேட்லி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014}ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றதில் இருந்து, அதே ஆண்டு நவம்பர் 9}ஆம் தேதி வரை, பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
அதைத் தொடர்ந்து, மனோகர் பாரிக்கருக்குப் பிறகு, இரண்டாவது முறையாகப் பாதுகாப்புத் துறையைக் கவனித்து வந்த ஜேட்லி, தனது பதவிக் காலத்தில், ஆயுதத் தளவாட உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் பல முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com