"புளூ வேல்' விளையாட்டு: ரயில் முன்பு பாய்ந்து மாணவர் தற்கொலை

மத்தியப் பிரதேசத்தின் தாமோ நகரில் புளூ வேல் விளையாட்டில் ஈடுபட்ட 12}ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மத்தியப் பிரதேசத்தின் தாமோ நகரில் புளூ வேல் விளையாட்டில் ஈடுபட்ட 12}ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சாவதற்கு முன்பு ஓடும் ரயில் முன்பு நின்று சுயபடம் (செல்ஃபி) எடுத்துக் கொண்ட அந்த 17 வயது மாணவர், பின்னர் ரயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் அனைத்தும் அப்பகுதியில் அமைத்துள்ள வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
புளு வேல் விளையாட்டால்தான் அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது செல்போனைக் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். கடந்த இருநாள்களாக ரயில்வே தண்டவாளம் அருகே வந்து ஓடும் ரயிலுக்கு முன்பு புகைப்படம் எடுத்துள்ளார்.
சனிக்கிழமை இரவு புளு வேல் விளையாட்டின் இறுதிக் கட்டத்துக்கு வந்த அவர், தனது மோட்டார் சைக்கிளில் ரயில் தண்டவாளம் அமைந்துள்ள பகுதிக்கு வந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு, மீண்டும் ஓடும் ரயில் முன்பு நின்று புகைப்படங்களை எடுத்துள்ளார். பிறகு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோக்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். அவர் புளூ வேல் விளையாட்டில் ஈடுபட்டதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று போலீஸôர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com