ஆசிரியர் தினம்: குடியரசுத் தலைவர் வாழ்த்து

கற்பித்தல் பணியாற்றி வரும் அனைவருக்கும் ஆசிரியர் தினத்தையொட்டி (செப்.5) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினம்: குடியரசுத் தலைவர் வாழ்த்து

கற்பித்தல் பணியாற்றி வரும் அனைவருக்கும் ஆசிரியர் தினத்தையொட்டி (செப்.5) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நம்மை உருவாக்கிய ஆசிரியர்கள் மீது பேரன்பும், பெரும் மரியாதையும் கொண்டிருக்க வேண்டியது அனைவருக்கும் உள்ள தார்மீகக் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமானது நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவின் சிறப்பு மிக்க பாரம்பரியங்களில் குரு - சிஷ்யன் கலாசாரமும் ஒன்று. தங்களது ஞானத்தையும், அறிவையும் மாணவர்களுக்கு ஊட்டி அவர்களை மேம்படுத்தும் அளப்பரிய சேவையை ஆசிரியர்கள் ஆற்றி வருகின்றனர்.
சமூகத்தில் மாண்பு மிக்க மனிதராக ஒவ்வொருவரும் உருவெடுப்பதற்கு முதன் முதலில் வழிகாட்டியாக இருப்பது நமது ஆசிரியர்களே. அவர்கள் மீது அளவற்ற அன்பையும், மனப்பூர்வமான மரியாதையையும் செலுத்த வேண்டியது நமது தலையாய கடனாகும்.
குழந்தைகளுக்கு உள்ளே ஒளிந்திருக்கும் திறமைகளையும், கற்பனை வளத்தையும் வெளிக் கொணருவதில் ஆசிரியர்களுக்கே அதிமுக்கிய பங்கு உண்டு.
சிறப்பு வாய்ந்த இந்நாளில் (செப்.5) மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு புகழ் வணக்கங்களைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆசிரியப் பணியாற்றி வரும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com