ஜிஎஸ்டி தாக்கலுக்கு கூடுதல் அவகாசம்

தொழில் நிறுவனங்கள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் செய்த கொள்முதல், விற்பனை உள்ளிட்டவற்றுக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் 5 முதல் 15 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் செய்த கொள்முதல், விற்பனை உள்ளிட்டவற்றுக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் 5 முதல் 15 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜூலை மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர் 1 படிவத்தை செப்டம்பர் 5-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது, இப்போது செப்டம்பர் 10-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜிஎஸ்டிஆர்2 படிவத்தை செப்டம்பர் 10-ல் தாக்கல் செய்ய வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது செப்டம்பர் 25 வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டிஆர்1 மற்றும் ஜிஎஸ்டிஆர்2 இரண்டும் இணைந்த ஜிஎஸ்டிஆர்3 படிவத்தை தாக்கல் செய்ய வேண்டிய தேதி செப்டம்பர் 15-ல் இருந்து செப்டம்பர் 30-க்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டிஆர்1 தாக்கல் செய்யும் தேதி செப்டம்பர் 20-ல் இருந்து அக்டோபர் 5-க்கும், ஜிஎஸ்டிஆர்2 தாக்கல் செய்யும் தேதி செப்டம்பர் 25-ல் இருந்து அக்டோபர் 10-க்கும், ஜிஎஸ்டிஆர்3 தாக்கல் செய்யும் தேதி செப்டம்பர் 30-ல் இருந்து அக்டோபர் 15-க்கும் மாற்றப்பட்டுள்ளது.
வரியைக் குறைக்க வாய்ப்பு: ஜிஎஸ்டி வரி அதிக அளவில் வசூலானால் வரி விகிதத்தைக் குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்கும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதல் மாத வரி வசூல் சிறப்பாக இருந்தது. இதே நிலை டிசம்பர் வரை தொடருமானால் வரி விகிதங்கள் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் பொருள்களுக்கான வரி விகிதங்கள் குறைய அதிக வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com