நிலக்கரிச் சுரங்க முறைகேடு: நவீன் ஜிண்டாலுக்கு ஜாமீன்

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உள்ளிட்ட 4 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
நிலக்கரிச் சுரங்க முறைகேடு: நவீன் ஜிண்டாலுக்கு ஜாமீன்

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உள்ளிட்ட 4 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
தலா ரூ.1 லட்சம் சொந்த ஜாமீன் தொகை மற்றும் அதே அளவு பிணைத் தொகையின் பேரில் அவர்கள் நான்கு பேருக்கும் சிறப்பு நீதிபதி பரத் பராஷர் ஜாமீன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
ஜிண்டாலைத் தவிர, ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர் லிமிடட் நிறுவனத்தின் (ஜேஎஸ்பிஎல்) முன்னாள் இயக்குநர் சுஷீல் மாரூ, முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் ஆனந்த் கோயல் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விக்ராந்த் குஜரால் ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் வடக்கு உர்தான் நிலக்கரிச் சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் மற்றும் குற்றச் சதியில் ஈடுபட்டதாக அந்த நான்கு பேர் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நிலக்கரிச் சுரங்கத்துக்குத் தேவையான கட்டுமான இயந்திரங்களை வாங்கியது தொடர்பாக ஜேஎஸ்பிஎல் நிறுவனம் தவறான தகவல்களை அளித்து, மத்திய நிலக்கரித் துறை அமைச்சகத்தை ஏமாற்றியதாக அந்தக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில நிலக்கரிச் சுரங்கம் முறைகேடு தவிர, ஜார்க்கண்ட் மாநிலத்தின் அமர்கோண்டா முர்கடங்கல் நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் நவீன் ஜிண்டால் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com