கௌரி லங்கேஷ் படுகொலை: சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது கர்நாடக அரசு

மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மரணம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கௌரி லங்கேஷ் படுகொலை: சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது கர்நாடக அரசு


பெங்களூர்: மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மரணம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி ஆலோசனை நடத்தினர்.

அப்போது, கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து விசாரிக்க காவல்துறை ஆய்வாளர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய சித்தராமையா, கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் நான் தயார். ஆனால் முதலில் சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்கட்டும். அவர்களது குடும்பத்தில் யாரேனும் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தினால் நிச்சயம் அது செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com