மனசாட்சியைக் கொன்று வேலையைத் தொடர விரும்பாததால் ராஜினாமா செய்கிறேன்: காஷ்மீர் காவலரின் பகிரங்க வீடியோ!

இந்நிலையில் இஸ்லாமிய காவலர் ஒருவர் இன்று வெளியிட்டுள்ள யூ டியூப் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து காஷ்மீர் காவல்துறையினர் தீவிர விசாரணையில்
மனசாட்சியைக் கொன்று வேலையைத் தொடர விரும்பாததால் ராஜினாமா செய்கிறேன்: காஷ்மீர் காவலரின் பகிரங்க வீடியோ!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறைச் சம்பவங்களால் பல ஆண்டுகளாகவே காஷ்மீரில் பதட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் கிளர்ச்சியாளர்களை அடக்க இந்திய ராணுவமும், காஷ்மீர் காவல்துறையும் கூட மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு ஒவ்வாத பல காரியங்களை அங்கே செயல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இஸ்லாமிய காவலர் ஒருவர் இன்று வெளியிட்டுள்ள யூ டியூப் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து காஷ்மீர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஏனெனில் வீடியோவில் வேலையை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்திருப்பது உண்மையான காவலர் தானா? அல்லது இதுவும் ஒரு இணைய மோசடி விளையாட்டா? என்ற சந்தேகம் தான். ஆனால், வீடியோவின் உண்மைத் தன்மை நிரூபிக்கப்படும் முன்பே அந்த வீடியோ இன்றைய இணைய வைரல்களில் ஒன்றாகி விட்டது.  அந்த வீடியோ இது தான்...

அந்த வீடியோவில், ரயீஸ் என்ற பெயருடைய அந்தக் காவலர்;

காஷ்மீரில் ஒரு காவலராக தனது மனசாட்சியைக் கொன்று கொண்டு அரசு வேலையில் நீடிக்கத் தனக்கு விருப்பமில்லை என்றும், இங்கே நடைபெற்று வரும் கொடுஞ்செயல்களைக் கண்டு தன் உள்ளம் கொதித்துக் கொண்டிருப்பதால் ஒரு பக்கம் ஜிகாத்தை மனம் ஆதரிக்கும் போது, அந்த மனநிலையோடு தொடர்ந்து இந்தியக் காவல்துறையில் நீடித்து ஒரு காவலராகப் பணியிலிருப்பது மனசாட்சியைக் கொலை செய்வதற்குச் சமம் என்பதால், நான் என்னுடைய வேலையை ராஜினாமா செய்கிறேன். என்று தெரிவித்திருக்கிறார். தான் செய்வது சரியா, தவறா?! என்பதைக் காட்டிலும், இதன் மூலமாகத் தனது மனசாட்சியின் தொடர் கேள்விகளில் இருந்து நான் தப்பித்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரயீஸ், காஷ்மீர் காவல்துறையில் கடந்த 7 ஆண்டுகளாகத் தானொரு கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்து வருவதாகவும், தனது குடும்பம் மிகவும் வறியது என்றும் தனது தந்தை ஒரு கூலித்தொழிலாளியாக இருந்த போதும் கூட ஜிகாத்தைப் பொறுத்தவரை தன்னால் மிகக் கடுமையாக உழைத்து தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியதோடு, ஆனால் தன்னால் மீண்டும், மீண்டும் தனது மனசாட்சியைக் கொன்று கொண்டு இந்த காவல்துறைப் பணியில் மட்டும் நீடிக்கவே முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில், தான் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட போது.. .பொதுமக்களுக்கு சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். ஆனால் நான் செய்து கொண்டிருப்பதோ ஜிகாத்(புனிதப் போர்) எனவே இந்த வேலையில் இனியும் நீடிப்பது பொருத்தமாக இருக்காது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலமை மேலும் மோசமடைந்துள்ளது. இங்கு தடையற்ற புயலொன்று வெளிப்பட்டுள்ளது.

தினமும் இங்கு கிளர்ச்சிகள் வெடித்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் சண்டையில் தினமும் யாராவது தங்களது கண்களை இழக்கின்றனர், சிலர் சிறையிலடைக்கப்படுகின்றனர். சிலர் வீட்டுச் சிறையில் வைக்கப்படுகின்றனர். காஷ்மீரைப் பொறுத்தவரை அங்கே அமைதிக்கே வழியில்லை. இத்தனைக்கும் காரணம் இங்குள்ள மக்கள் பொது வாக்கெடுப்பு முறையை விரும்புவதால் மட்டுமே. ஆனால் அது நடைபெறுவதற்கான வழியைத் தான் காணோம்.

காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு முறை நடைபெறப் போவதற்கான அறிகுறியே எப்போதுமில்லை. காஷ்மீர் மக்களுடைய அந்த எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்துப் போனது. இங்கு நடக்கும் போரிலும், கிளர்ச்சிகளிலும் இந்தியர்களும், பாகிஸ்தானிகளும் இறந்தாலும் கூட இங்கே அதிக பாதிப்பு என்பது காஷ்மீரிகளுக்குத் தான். நான் இந்தியாவை வெறுப்பதோ பாகிஸ்தானை விரும்புவதோ அல்ல இப்போதைய பிரச்னை. எனக்கு என் காஷ்மீரைப் பிடிக்கும். அங்கே அமைதி நிலவ வேண்டுமென ஒரு காஷ்மீரியாக மிகவும் விரும்புகிறேன்.

இந்தப் பிரச்னைக்கான தீர்வு என் கைகளில் இல்லாமலிருக்கலாம். ஆனால் ஒரு காவலனாக காஷ்மீரின் ரத்தக் களறியை வேடிக்கை பார்த்துக் கொண்டு என் மனசாட்சிக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும் துன்பம் எனக்கு இனி எனக்கு இருக்கப்போவதில்லை என்பதே எனக்கு நிம்மதி தருவதாக இருக்கிறது. என்று ரயீஸ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com