பெங்களூரில் மூத்த பெண் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

பெங்களூரில் வெளியாகும் லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரும், இலக்கியவாதியுமான கெளரி லங்கேஷ் (55) செவ்வாய்க்கிழமை மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரில் மூத்த பெண் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

பெங்களூரில் வெளியாகும் லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரும், இலக்கியவாதியுமான கெளரி லங்கேஷ் (55) செவ்வாய்க்கிழமை மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்துவந்த கெளரி லங்கேஷ் செவ்வாய்க்கிழமை காரில் வெளியே சென்றுவிட்டு இரவு 8 மணியளவில் வீட்டுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கைத் துப்பாக்கியால் 7 முறை சுட்டுள்ளனர். 
இதில் நெற்றி, மார்பு உள்ளிட்ட இடங்களில் 3 குண்டுகள் பாய்ந்ததில் நிகழ்விடத்திலே கெளரி லங்கேஷ் உயிரிழந்தார். தகவலறிந்த ராஜராஜேஸ்வரி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த கெளரி லங்கேஷ், மூத்த பத்திரிகையாளர் பி.லங்கேஷின் மகள். 
இடதுசாரி சிந்தனை கொண்ட இவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்துகளைக் கூறி வந்தார். கர்நாடகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமலாக்க ஆதரவு தெரிவித்து வந்தார். 
இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியது:
இலக்கியவாதி கல்புர்கி கொலை செய்தது போலவே, கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. விரைவில் கொலையாளிகளைக் கைது செய்வோம் என்றார்.
சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா செய்தியாளர்களிடம் கூறியது: 
நாள்தோறும் கொலைகள் அதிகரித்துள்ள மாநிலமாக கர்நாடகம் விளங்குகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக கர்நாடகம் இருப்பது வேதனை அளிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகத்தில் கொலைகள் அதிகரித்து, சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com