மியான்மர் அதிபருடன் மோடி சந்திப்பு

மியான்மருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஹிடின் கியாவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
மியான்மர் தலைநகர் நைபெய்டாவில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடியை சந்தித்த அந்நாட்டு ஜனநாயகத்துக்கான தேசியத் தலைவர் ஆங் சாங் சூகி.
மியான்மர் தலைநகர் நைபெய்டாவில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடியை சந்தித்த அந்நாட்டு ஜனநாயகத்துக்கான தேசியத் தலைவர் ஆங் சாங் சூகி.

மியான்மருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஹிடின் கியாவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது என்று மோடி சுட்டுரையில் (டுவிட்டர்) தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஜியாமென் நகரில் 3 நாள்கள் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற மோடி, செவ்வாய்க்கிழமை அங்கிருந்து மியான்மருக்குச் சென்றார். 
மியான்மரில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்நாட்டு அதிபர் ஹிடின் கியாவைச் சந்தித்த மோடி, அந்நாட்டு ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
போதி மரத்தின் சிற்பத்தையும், மியான்மரின் முக்கியமான சால்வீன் நதியின் 1841-ஆம் ஆண்டு வரைபடத்தையும் ஹிடின் கியாவுக்கு மோடி பரிசாக அளித்தார். அப்போது, இந்தியா- மியான்மர் இடையே பல ஆண்டுகால தொடரும் வரலாற்று உறவை மோடி நினைவுகூர்ந்தார்.
சூகியுடன் சந்திப்பு: ஹிடின் கியாவ் சார்பில் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. அதில் மியான்மரின் ஜனநாயகத்துக்கான தேசியத் தலைவர் ஆங் சாங் சூகி பங்கேற்றார். அப்போது இரு தலைவர்களும் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இரு தலைவர்களும் புதன்கிழமை சந்தித்து இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து விரிவாகப் பேச இருக்கின்றனர்.
மியான்மரின் ராகைன் மாகாணத்தில் ரோஹிங்க்யா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது. அதைத் தொடர்ந்து, அச்சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். 
அவர்களில் 14,000 பேர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அகதிகளாகப் பதிவு பெற்று, சட்டப்படி இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். 
மேலும் 40,000 பேர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பேச்சு நடத்தப்படும் என்று தெரிகிறது.
இது தவிர பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, வர்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி, காலசாரம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்க இருக்கின்றனர்.
மியான்மருக்கு மோடி இப்போதுதான் முதல்முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு முன்பு 2014-ஆண்டு ஆசியான்-இந்தியா மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி அந்நாட்டுக்குச் சென்றார். அதே ஆண்டில் அப்போது மியான்மர் அதிபராக இருந்த ஆங் சாங் சூகி இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவுடன் 1,640 கி.மீ. தொலைவு எல்லையை மியான்மர் பகிர்ந்து கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com