கிழக்கு ரஷியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு மேம்பட வேண்டும்

ரஷியாவின் கிழக்கத்தியப் பகுதிகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா விரும்புவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ரஷியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு மேம்பட வேண்டும்

ரஷியாவின் கிழக்கத்தியப் பகுதிகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா விரும்புவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் வேகமான பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டி வருகிறது என்பதால் கிழக்கு ரஷியாவிலிருந்து அதிக முதலீடுகளை எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசு முறைப் பயணமாக ரஷியா சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கிழக்கு ரஷியாவின் பொருளாதார கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் கலந்துகொண்டார். அதில், சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:
இந்தியாவின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. சர்வதேச அளவில் அது தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் வாயிலாகவே இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.
குறிப்பாக சரக்கு - சேவை வரிச் சட்டம் புதிதாக அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் தொழில் முதலீடுகளும், வர்த்தக நடவடிக்கைகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் மூலம் சர்வதேச தொழில்நுட்பங்கள், முதலீடுகள் உள்ளிட்டவற்றை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சூழலைத் தவிர, இந்தியாவில் வர்த்தம் மேற்கொள்ள சரியான தருணம் எப்போதும் அமையாது. ரஷியாவின் கிழக்குப் பகுதிகள் அதிக வளம் மிக்கவையாக உள்ளன. உலக அளவில் அது செல்வச் செழிப்பான பகுதியாக விளங்குகிறது.
தற்போது உள்ள சூழ்நிலையில், இந்தியாவும், கிழக்கு ரஷியாவும் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை புதிதாக மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. பரஸ்பரம் முதலீடுகளை செய்து கொள்ள இதுவே நல்ல தருணம். குறிப்பிட்டுச் சொன்னால், இந்தியாவின் பொருளாதார நிலை, கிழக்கு ரஷிய நிறுவனங்கள் அங்கு தொழில் தொடங்குவதற்கு சிவப்பு கம்பளம் விரிப்பதாக அமைந்துள்ளது.
இரு தரப்புக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த ரஷிய அரசு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை ரஷிய எண்ணெய் நிறுவனங்களில் 550 கோடி டாலர்கள் (சுமார் ரூ. 35,200 கோடி) முதலீடு செய்துள்ளது. அதேபோன்று ரஷியாவிலுள்ள கல்வி நிறுவனங்களில் இந்தியா மற்றும் அதன் கலாசாரங்கள் (இந்தோலஜி) பற்றிய படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு 10,000 டாலர்கள் (சுமார் ரூ.6.5 லட்சம்) மானியம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com