2019 மக்களவைத் தேர்தலை கருத்தில்கொண்டு புதிய யுக்திகள்

வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு புதிய யுக்திகளை வகுக்க திட்டமிட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம்
2019 மக்களவைத் தேர்தலை கருத்தில்கொண்டு புதிய யுக்திகள்

வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு புதிய யுக்திகளை வகுக்க திட்டமிட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
கட்சி விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும் அரசியல் தலைமைக் குழுக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை யெச்சூரி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற சந்திப்பின்போது கட்சியின் அணுகுமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டன. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாங்கள் மீண்டும் ஒன்றுகூடி கட்சியின் அணுகுமுறைகளை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலைக் கருத்தில் புதிய யுக்திகளை வகுக்கவும் திட்டமிட்டுள்ளோம். 
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதன் மூலம், நாட்டில் பாசிசப் போக்குகள் அதிகரித்து வருவதை உணர முடிகிறது. பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அட்டூழியங்களில் ஈடுபடுவர்களை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
மியான்மரிலிருந்து வெளியேறிவரும் ரோஹிங்கியா சமூகத்தினர் சந்தித்துவரும் பிரச்னைகளை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் கவனத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு செல்ல வேண்டும்.
மியான்மரில் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது அந்த சமூகத்தினர் குறித்து கலந்துரையாடாமல் திரும்பியது திருப்தியளிக்கவில்லை என்றார் யெச்சூரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com