ராணுவ காவல்துறையில் 874 பெண்கள்

இந்திய ராணுவ காவல்துறையில் பெண்களை சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராணுவ காவல்துறையில் 874 பெண்கள்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சாரக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். பாதுகாப்புத்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கப்பேவதாக பதவியேற்றபோது அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், ராணுவ காவல்துறையில் பெண்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, வருகிற 2018 முதல் இம்முடிவு அமல்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு 52 பேர் என்ற விகிதத்தில் 874 பெண்களை முதல்கட்டமாக சேர்ப்பதற்கான முடிவு வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து ராணுவ தளபதி கூறியதாவது:

ஒவ்வொரு வருடமும் ராணுவ காவல்துறையில் பெண்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 874 பெண்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பாலின தடைகளை உடைப்பதில் ஒரு பெரிய படியாக கருதப்படும் திட்டமாக அமையும் என்றார்.

மருத்துவம், சட்டம், கல்வி, உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் துறைகளில் பெண்கள் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com