பள்ளிக் கழிப்பறையில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட இரண்டாம் வகுப்பு மாணவன்: நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம்! 

தில்லியை அடுத்துள்ள குர்கானில் தன்னுடைய பள்ளிக் கழிப்பறையில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.  
பள்ளிக் கழிப்பறையில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட இரண்டாம் வகுப்பு மாணவன்: நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம்! 

குர்கான்: தில்லியை அடுத்துள்ள குர்கானில் தன்னுடைய பள்ளிக் கழிப்பறையில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

ஹரியாணா மாநிலம்  குர்கானில் உள்ள சோஹ்னா என்ற இடத்தில் ரியான் சர்வதேசப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ப்ரதுமன் தாகூர் (7). இவன் இன்று காலை 8.30 மணி அளவில் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறை ஒன்றில் கழுத்தறுத்துக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளான்.

இதனைக் கண்ட சக மாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் மூலமாக விவரமறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இது தொடர்பாக குர்கான் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரவீந்தர் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனை உடனடியாக அருகிலிருந்த அர்டெமிஸ் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு மாணவர் ப்ரதுமன் இறந்தே கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் உடனடியாக மாணவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்டோர்களுடன் சேர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில், சம்பவ இடத்திலிருந்து ரத்த மாதிரிகளும், கைரேகைகளும் கண்டெடுக்கப்பட்டன.  அத்துடன் ரத்தக்கறைகளுடன் உள்ள கத்தி ஒன்றும் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் மாணவரது வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தோழர்கள் எல்லாரிடமும் எல்லா கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்.   மேலும் அப்பள்ளி வளாகத்தில் பதிவாகியுள்ள 30-க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளையும் ஆராய்ந்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். மாணவரது தந்தை வருண் பேசும் பொழுது, '

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தன்மையே எனது மகனின் சாவுக்கு காரணம். அவர்கள் சரியாக அங்கு மாணவர்களை கவனித்துக் கொள்வதில்லை.  அவர்கள் சரியாக செயல்பட்டிருந்தால் என்னுடைய மகன்  காப்பாற்றப்பட்டிருப்பான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com