விமானங்கள் மீது இரசாயனத் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

விமானம் மற்றும் பிற பொது போக்குவரத்து முறைகளில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விஷ வாயு மூலம் தாக்குதல் நடத்த
விமானங்கள் மீது இரசாயனத் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

புதுதில்லி: விமானம் மற்றும் பிற பொது போக்குவரத்து முறைகளில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விஷ வாயு மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், பொதுமக்கள் பயணிக்கும் விமானம், ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்துகளை குறிவைத்து  தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் பொருட்கள் மூலம் விஷ வாயு அல்லது ரசாயன பொடிகள், பூச்சிக்கொல்லிகள், அமிலங்கள் மற்றும் நீர் போன்ற எளிதில் தயாரிக்கப்படக்கூடிய மருந்துகள், உணவு, பானங்கள் அல்லது வீடு துடைக்கும் பொருட்கள் மூலம் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

மூடப்பட்ட பகுதிகளில் விஷ வாயவால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விமானம், பேருந்து, ரயில், பஸ் போக்குவரத்து பயணிகளுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுதுவம் உள்ள விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே நிலையங்களில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com