ராம் ரஹீம் ஆசிரமத்தில் 2 ரகசிய சுரங்கப் பாதைகள்

பாலியல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள குர்மீத் ராம் ரஹீமின் "தேரா சச்சா செளதா' அமைப்பினுடைய தலைமையகத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையையும், பெண்கள் விடுதியுடன் ராம் ரஹீமின் இருப்பிடத்தை
ஹரியாணா மாநிலம், சிர்ஸா நகரிலுள்ள 'தேரா சச்சா செளதா' அமைப்பின் தலைமையகத்தில் 2-ஆவது நாளாக நடைபெறும் சோதனையையொட்டி, அந்த ஆசிரமம் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்கள்.
ஹரியாணா மாநிலம், சிர்ஸா நகரிலுள்ள 'தேரா சச்சா செளதா' அமைப்பின் தலைமையகத்தில் 2-ஆவது நாளாக நடைபெறும் சோதனையையொட்டி, அந்த ஆசிரமம் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்கள்.

பாலியல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள குர்மீத் ராம் ரஹீமின் "தேரா சச்சா செளதா' அமைப்பினுடைய தலைமையகத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையையும், பெண்கள் விடுதியுடன் ராம் ரஹீமின் இருப்பிடத்தை இணைக்கும் ரகசியப் பாதை உள்ளிட்ட இரு சுரங்கப் பாதைகளையும் அதிகாரிகள் சனிக்கிழமை கண்டறிந்தனர்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் "தேரா சச்சா செளதா' தலைமையகத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர், அரசு அதிகாரிகள் ஆகியோர் வெள்ளிக்கிழமை முதல் கடுமையான சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சோதனையின் இரண்டாவது நாளான சனிக்கிழமை பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், அங்கு சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
மேலும், ராம் ரஹீம் தங்கியிருந்த பகுதியுடன், ஆசிரமத்தின் பெண் சீடர்கள் தங்கும் விடுதியை இணைக்கும் ரகசிய சுரங்கப் பாதையை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதுகுறித்து மாநில தகவல் மற்றும் பொதுமக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர் சதீஷ் மெஹரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேரா சச்சா வளாகத்தின் உள்ளே ஒரு பட்டாசுத் தொழிற்சாலை இயங்கி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அது சட்டவிரோதத் தொழிற்சாலையாகும். அந்த ஆலையிலிருந்து பட்டாசுகள் தயாரிப்பதற்கான வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தத் தொழிற்சாலையை முடி சீல் வைத்துள்ளோம்.
இதுமட்டுமன்றி, ராம் ரஹீம் தங்கும் "குஃபா' பகுதியிலிருந்து, பெண் சீடர்கள் தங்கியிருக்கும் "சாத்வி நிவாஸ்' விடுதிக்குச் செல்வதற்கான ரகசிய சுரங்கப்பாதை ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதவிர, ராம் ரஹீம் தனி இல்லத்துக்கு 5 கி.மீ. தொலைவில் ஃபைபர் கண்ணாடியால் ஆன மற்றொரு சுரங்கப் பாதையும் கண்டறியப்பட்டது.
மேலும், ஏகே 47 ரகத் துப்பாக்கி குண்டுகளை வைப்பதற்கான பெட்டி ஒன்றும் காலியான நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
முன்னதாக, தேரா சச்சா தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையின்போது, பதிவு பெறாத சொகுசு கார் மற்றும் வேன் ஒன்றையும், ரூ.7,000 மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகளையும், அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதைத் தவிர, ரூ.12,000 ரொக்கம், லேபிள் அச்சிடப்படாத மருந்துகள் உள்ளிட்டவற்றையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், கணினி ஹார்டு டிஸ்க்குகள், முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த சில அறைகளை பூட்டிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவற்றுக்கு சீல் வைத்தனர்.
இருவர் கைது: இதற்கிடையே, ராம் ரஹீமின் சிறைத் தண்டனையை எதிர்த்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, தேரா சச்சா செளதா அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இருவரை சண்டீகர் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com