ஊழல் வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன்: இபோபி சிங்

தன் மீதான ஊழல் வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங் தெரிவித்துள்ளார்.

தன் மீதான ஊழல் வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலம் மோரியாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது லோக்தக் ஏரி. இந்த ஏரியை நீர் விளையாட்டுகளுக்கு ஏற்ப புனரமைப்பதற்காக மணிப்பூர் வளர்ச்சிக் கழகத்துக்கு கடந்த 2013-ஆம் ஆண்டில் ரூ. 186.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதனிடையே, இந்த நிதியில் பெருமளவு முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில், இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங், முன்னாள் தலைமைச் செயலாளர்கள் ஒய். நிங்தேம் சிங், பி.சி. லாம்குங்கா, ஓ. நபகிஷோர் சிங் ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன.
இந்த வழக்கில் இபோபி சிங்குக்கு கடந்த 6-ஆம் தேதி முன்ஜாமீன் கிடைத்தது. இதன் காரணமாக, அவர் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இபோபி சிங் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
லோக்தக் ஏரியை புனரமைக்கும் திட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழலுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்தவித முகாந்திரமும், ஆதாரமும் இல்லாமல் என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. எனது பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா, இல்லையா என்பதை மக்களே முடிவு செய்வார்கள். இந்த வழக்கு தொடர்பாக எந்த அமைப்பு விசாரணை நடத்தினாலும் அதற்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்றார் இபோபி சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com