உ.பி. சட்ட மேலவைத் தேர்தல்: பாஜக 5 இடங்களிலும் போட்டியின்றி தேர்வு

உத்தரப் பிரதேச சட்ட மேலவையில் காலியான 5 இடங்களுக்கு நடத்தப்பட்ட இடைத் தேர்தலில், பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
உ.பி. சட்ட மேலவைத் தேர்தல்: பாஜக 5 இடங்களிலும் போட்டியின்றி தேர்வு

உத்தரப் பிரதேச சட்ட மேலவையில் காலியான 5 இடங்களுக்கு நடத்தப்பட்ட இடைத் தேர்தலில், பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேச சட்ட மேலவையில் காலியான 5 இடங்களுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக சார்பில் முதல்வர் யோகி ஆதித்யநாத், 2 துணை முதல்வர்கள், அமைச்சர்கள் 2 பேர் என்று மொத்தம் 5 பேர் போட்டியிட்டனர்.
இவர்களில் யோகி ஆதித்யநாத், 2 துணை முதல்வர்கள், அமைச்சர் ஒருவர் ஆகிய 4 பேர் கடந்த 8-ஆம் தேதி போட்டியின்றி சட்ட மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
எஞ்சிய ஒரு இடத்துக்கு அமைச்சர் மோசீன் ரஸா போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் நிலவியது. இந்நிலையில், அவரும் சட்ட மேலவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டார். இதுதொடர்பான அறிவிப்பை உத்தரப் பிரதேச சட்டப் பேரவை முதன்மைச் செயலரும், தேர்தல் அதிகாரியுமான பிரதீப் துபே வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச சட்ட மேலவைக்கு 5 இடங்களுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், 100 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்ட மேலவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச சட்ட மேலவையில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களே பெரும்பான்மையான எண்ணிக்கையில் உள்ளனர். அதாவது, சமாஜவாதி கட்சிக்கு 61 உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 9, காங்கிரஸ் கட்சிக்கு 2 உறுப்பினர்களும், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். பிற கட்சிகளுக்கு 12 இடங்கள் உள்ளன.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் நடைபெற்ற பாஜக வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவரான யோகி ஆதித்யநாத், மாநில முதல்வராக கடந்த மார்ச் மாதம் 19-ஆம் தேதி பதவியேற்றார். அப்போது அவர், மாநில சட்டப் பேரவை உறுப்பினராகவோ அல்லது சட்ட மேலவை உறுப்பினராகவோ இல்லை. இதேபோல், யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருக்கும் 2 துணை முதல்வர்களும், 2 அமைச்சர்களும் இரு அவைகளிலும் உறுப்பினர்களாக இல்லை.
இதனால், பதவியேற்ற 6 மாத காலத்துக்குள் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக வேண்டிய நிலையில் அவர்கள் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com