ஒடிஸா மேம்பால விபத்து: பொறியாளர் கைது

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக பொதுப் பணித் துறையின் துணை செயற்பொறியாளர் பன்சிதர் பிரஹராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக பொதுப் பணித் துறையின் துணை செயற்பொறியாளர் பன்சிதர் பிரஹராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து காவல் துறை ஆணையர் ஒய்.பி.குரானியா செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
இந்த மேம்பாலக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பாண்டா கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர்கள் சந்தோஷ் பாண்டா, பிரதீப் பாண்டா, சுஜாதா பாண்டா, பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் கிஷோர் ரௌத், பிரஹராஜ் ஆகிய ஐவர் மீது பல்வேறு பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் புவனேசுவரம் விவேகானந்தா சாலையில் செயல்படும் பாண்டா கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் பிற நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்தில் தொழிலதிபர் சத்யபிரத பட்நாயக் என்கிற தொழிலதிபர் உயிரிழந்தார். இவரது சாவும் செயற்கையாக மரணம் என்கிற ரீதியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக பிரஹராஜ், ரௌத், செயற்பொறியாளர் துகபந்து பெஹிரா ஆகிய மூவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புவனேசுவரம் பொமிகால் பகுதியில் கட்டப்பட்டுவந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் திடீரென இடிந்து விழுந்ததில் தொழிலதிபர் பட்நாயக் உயிரிழந்தார். மேலும் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com