புதிய மத்திய அமைச்சரவையில் பவார் மகளுக்கு மோடி அழைப்பு?

அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு இடமளிக்க நரேந்திர மோடி முன்வந்தாக சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவுத் கூறியுள்ள

அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு இடமளிக்க நரேந்திர மோடி முன்வந்தாக சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவுத் கூறியுள்ளதற்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், சிவசேனை கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் ராவுத் எழுதிய கட்டுரை, அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான "சாம்னா'வில் ஞாயிற்றுக்கிழமை வெளியானது.
அந்தக் கட்டுரையில், அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, அதில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருக்கு இடம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டது தொடர்பாக அவரிடமே நேரில் விசாரித்ததாக சஞ்சய் ராவுத் குறிப்பிட்டுள்ளார்.
அந்தத் தகவலை மறுத்த சரத் பவார், தனது மகள் சுப்ரியா சுலேவைத்தான் புதிய அமைச்சரவையில் இடம் பெறச் செய்ய பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்ததாகவும், எனினும் அதில் சுப்ரியா சுலே ஆர்வம் காட்டவில்லை எனவும் கூறியதாக அந்தக் கட்டுரையில் சஞ்சய் ராவுத் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தத் தகவலை பாஜக மறுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மாதவ் பண்டாரி கூறியதாவது:
மத்திய அமைச்சரவையில் தனது மகளுக்கு இடமளிக்க நரேந்திர மோடி முன்வந்ததாக சரத் பவார் கூறியதையும் நம்ப முடியாது; அவர் அவ்வாறு கூறியதாக சஞ்சய் ராவுத் கூறியதையும் நம்ப முடியாது. காரணம், அவர்கள் இருவருமே நம்பகத்தன்மை அற்றவர்கள்.
புதிய அமைச்சரவையில் இடம்பெற தேசியவாத காங்கிரஸ் விரும்பியிருக்கலாம்.
அந்த ஆசை நிறைவேறாத ஆதங்கமே இதுபோன்ற பொய்த் தகவல்களை அவர்கள் பரப்புவதற்கான காரணமாக இருக்கும் என்றார் மாதவ் பண்டாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com