போலிச் சாமியார்கள் பட்டியலில் பாபா ராம்தேவ் பெயர் இல்லாதது ஏமாற்றம்: திக் விஜய் சிங்

பாலியல் மோசடி புனிதர்களின் பட்டியலில் இருந்து பாபா ராம்தேவ் பெயர் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த
போலிச் சாமியார்கள் பட்டியலில் பாபா ராம்தேவ் பெயர் இல்லாதது ஏமாற்றம்: திக் விஜய் சிங்


போபால்: பாலியல் மோசடி புனிதர்களின் பட்டியலில் பாபா ராம்தேவ் பெயர் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

பாலியல் வழக்கில் பிரபல சாமியார் ராம் ரஹீம் சிங் சிறையிடைக்கப்பட்டதைத் தொடர்ந்து சாமியார்கள் குறித்த சர்ச்சைகள் அதிகமாகியுள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப்.10) 14 போலிச் சாமியார்களின் பட்டியலை சாதுக்களின் தலைமை அமைப்பான அகில பாரதிய அகாரா பரிஷத் அமைப்பு வெளியிட்டது.

அந்தப் பட்டியலில் ராம் ரஹீம் சிங் மட்டுமன்றி, சர்ச்சைக்குரிய ராம்பால், ஆஸாராம் பாபு, அவரது மகன் நாராயண் சாய், ராதே மா, சச்சிதானந்த் கிரி, குர்மீத் ராம் ரஹீம் சிங், சுவாமி ஓம்ஜி, நிர்மல் பாபா, இச்சாதாரி பீமானந்த், சுவாமி அசீமானந்த், ராம்பால், ஆச்சாரியா குஷ்முனி, பிரஹஸ்பதி கிரி, ஓம் நமசிவாய பாபா, மல்கன் சிங் என 14 சாமியார்களின் பெயர்கள் இடம் பெற்றன.

போலிச் சாமியார்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அவர்களது பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளோம் என அகில பாரதிய அகாரா பரிஷத் அமைப்பின் தலைவர் சுவாமி நரேந்திர கிரி தெரிவித்தார். 

மேலும், சாதுக்களுக்கும், சந்நியாசிகளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் அவர்களைப் போன்ற மோசடிப் பேர்வழிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறோம். போலிச் சாமியார்களின் பட்டியலை மத்திய மாநில அரசுகளுக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் அனுப்பவுள்ளோம் .

போலிச் சாமியார்கள் உருவாகாமல் கட்டுப்படுத்தவும், அவர்களது நடவடிக்கைகளைத் தடுக்கவும் தனி சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என ஆட்சியாளர்களிடமும், எதிர்க்கட்சிகளிடமும் வலியுறுத்தவுள்ளோம் என்று தெரிவித்திருந்தார் சுவாமி நரேந்திர கிரி.

இந்நிலையில், சாதுக்கள் அமைப்பான அகில பாரதிய அகாரா பரிஷத் அமைப்பு வெளியிட்டுள்ள பாலியல் மோசடி புனிதர்களின் பட்டியலில் பாபா ராம்தேவ் பெயர் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்றும் திக்விஜய் சிங் தனது டுவிட்டர் பக்க பதிவில் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு டுவிட்டில் மானு ஸ்மிருதி தொழிலில் ஈடுபடுவதிலிருந்து குங்குமப்பூ ஆடைகள் வரை போலியான பொருட்களை விற்று நாட்டு மக்களை அவர் ஏமாற்றி வரும் பாபா ராம்தேவ் பெயரையும் அந்த புனிதர்களின் பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும் என மரியாதைக்குரிய அகில பாரதிய அகாரா பரிஷத் அமைப்பை கேட்க விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com