இபிஎஸ்-ன் விரிவாக்கம் என்ன? பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில் சிரிப்பாய் சிரித்த கேள்வி!

இன்று உங்களுக்கு ஒரு சுமாரான நாளாக இருக்கிறதா? வாங்க இந்த செய்தியைப் படித்து, அதை மாற்றலாம்
இபிஎஸ்-ன் விரிவாக்கம் என்ன? பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில் சிரிப்பாய் சிரித்த கேள்வி!

இன்று உங்களுக்கு ஒரு சுமாரான நாளாக இருக்கிறதா? வாங்க இந்த செய்தியைப் படித்து, அதை மாற்றலாம்

தேசிய கட்சியான பாஜக, @BJPIndia என்ற டிவிட்டர் பக்கத்தில், மத்திய அரசின் நலத்திட்டங்களை கேள்வி பதில் வடிவில் பதிவிட்டு மக்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்து வருகிறது.

இதில் உங்கள் அரசை அறிந்து கொள்ளுங்கள் என்ற துணைத் தலைப்புடன் நேற்று ஒரு கேள்வி பதிவிடப்பட்டிருந்தது. கீழே இருப்பதுதான் அந்த டிவிட்டர் பதிவு. 

அதாவது EPS-ன் விரிவாக்கம் என்ன? என்பதே அந்த கேள்வி. அதற்கு நான்கு பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கேள்விக்கு சரியான பதில் Employee Pension Scheme. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த சரியான பதில், அந்த பதில்களுக்கான தேர்வுகளில் இடம்பெறவில்லை.

இந்த தவறை இணையவாசிகள் சுட்டிக்காட்டி கருத்துப் பதிவிட்டதும், இது வைரலாகப் பரவியது. சுமார் 30 நிமிடத்தில் 700 பேர் இதனைப் பார்த்தனர். கருத்துக் கூறினர். 

ஒருவர் EPS என்றால் எடப்பாடி பழனிசாமியா என்றும் கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

இது மட்டுமல்லாமல் ஏராளமானோர் தங்களது கருத்துகளை மிக நகைச்சுவையாக பதிவு செய்திருந்தனர்.

இதனால், பாஜகவின் டிவிட்டர் பக்கக் கேள்வி நேற்று பரவலாக பகிரப்பட்டு, பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் இந்த டிவிட்டர் பக்கத்தில், பெரும்பாலும் மத்திய அரசால் கொண்டு வரப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் கொள்கைகள் குறித்துத்தான் கேள்விகள் கேட்கப்படும். இந்த கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் அல்லது பதிலை தெரிந்து கொள்வதன் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிய வைக்கவே இந்த கேள்வி பதில் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com